- Home
- Cinema
- இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த சூப்பர் ஸ்டார் 'ஜெயிலர்' போஸ்டர்..! டிசைன் செய்தது யார் தெரியுமா?
இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த சூப்பர் ஸ்டார் 'ஜெயிலர்' போஸ்டர்..! டிசைன் செய்தது யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து இந்த போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த போஸ்டரை டிசைன் செய்த, டிசைனர் குறித்த தகவலும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'அண்ணாத்த' சிறுத்தை சிவா இயக்கத்தில். ரஜினிகாந்த் பல்வேறு தடைகளை தாண்டி நடித்த படம் இது எனலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடித்திருந்த நிலையில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் குஷ்பூ, மீனா, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், குடும்பமாக பார்க்கக்கூடிய படம் என ஒரு தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், தலைவரின் மாஸை எதிர்பார்த்து திரையரங்கம் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய 169 ஆவது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: Chennai Day Special: அன்று முதல் இன்று வரை... தலைநகர் சென்னை பெயரில் வெளியாகிய டாப் 10 படங்கள்..!
ஏற்கனவே ஜெயிலர் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று முதல் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதை தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனை ரஜினிகாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரை டிசைன் செய்த டிசைனர் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. சிவம் சி கபிலன் தான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கோப்ரா, திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது, காட்பாதர், ஆர் ஆர் ஆர், விருமன், வாத்தி, வணங்கான், லைகர், பிரின்ஸ், வெந்து தணிந்தது காடு, ராதே ஷ்யாம், சாணிக் காயிதம் போன்ற படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் என்பது குறிபிடத்தக்கது.
மேலும் செய்திகள்: விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.