விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!
விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் தன்னுடைய மகன்களுக்காக ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தது, தமிழ் திரையுலகினர் மற்றும் அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 18 ஆண்டுகள் விட்டுக்கொடுத்து, அன்பு குறையாத தம்பதியாக இருந்த இவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்கிற கருத்தையே நெட்டிசன்கள் முதல் ரசிகர்கள் வரை முன்வைத்து வந்தனர்.
இதை தான் அவர்கள் இருவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் கூறி, இருவருக்கும் இடையே பல முறை சமாதானம் பேசினர். தனுஷ் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்பட்டது. ஒரு நிலையில் இருவருமே பிரியப்போவதாக சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்: கமல்ஹாசன் கேரவனில் இத்தனை வசதிகளா? பிரதமர் மோடி கூட இதை தான் பயன்படுத்தினாராம்..! வைரலாகும் தகவல்..!
தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தாலும்... தங்களுடைய மகன்கள் மீது போட்டி போட்டு பாசத்தை பொழிந்து வருகிறார்கள். குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் யாத்ரா, லிங்கா எந்த நேரத்திலும் தனிமையாக இருக்கிறோம் என நினைத்திடாதபடி பார்த்து கொள்கிறார்கள். தனுஷ் தன்னுடைய மகன்களை, அவ்வப்போது ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கே அழைத்து சென்று விடுகிறார். சமீபத்தில் கூட, அமெரிக்காவில் நடந்த கிரே மேன் பிரீமியர் நிகழ்ச்சியில் இரு மகன்களுடன் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து மகன்கள் இருவரும் சென்னை திரும்பிய கையேடு, தன்னுடைய இரு மகன்களையும் கட்டியணைத்தபடி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படம் வெளியிட்டு இவர்கள் தான் தன்னுடைய உலகம் என்பது போல் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: சூர்யா, ஜோதிகா, தனுஷ், போன்ற நடிகர்கள் கலந்து கொண்ட ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி.! வைரலாகும் போட்டோஸ்!
சமீபத்தில் தனுஷ் வீட்டில் அவரது தாய் - தந்தைக்கு மணிவிழா நடந்த போது கூட, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது தனுஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மகன்களுக்காக கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர்களின் இந்த சந்திப்புக்கு காரணம் தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தான். அவர் தன்னுடைய பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்றுள்ளார். அதை காண தான் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மேட்சிங் - மேட்சிங் உடையில் சென்றுள்ளனர். இவர்களுடன் இந்த புகைப்படத்தில் விஜய் ஏசுதாஸின் குடும்பத்தினரும் உள்ளனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' இத்தனை கோடி வசூலா? வேற லெவலில் கெத்து காட்டும் தனுஷ்!
ஆனால் தனுஷுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடாமல், மகன் கேப்டனாக ஆனபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.