கமல்ஹாசன் கேரவனில் இத்தனை வசதிகளா? பிரதமர் மோடி கூட இதை தான் பயன்படுத்தினாராம்..! வைரலாகும் தகவல்..!
நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே தனித்துவமானவர், அது அவரது நடிப்பில் மட்டும் அல்ல... அவர் பயன்படுத்தும் பொருட்களுக்கும் அடங்கும். அந்த வகையில் தற்போது அவர் பயன்படுத்த கூடிய கேரவன் பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துக்கு கூட தனித்துவமான கேரவன் வடிவமைக்கப்படுவது இல்லை. ஆனால் கமல்ஹாசனுக்கு என தனித்துவமான கேரவன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரவனை பராமரிப்பவர்கள் ஒரு சிறு தவறு செய்தால் கூட, கமலின் கண்களில் இருந்து தப்பிக்க முடியாது என சொல்லப்படுகிறது. காரணம் ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வளவு பர்பெக்ட் பார்ப்பவர் கமல்.
கமலுக்கு வழங்கப்படும் சொகுசு கேரவனில் கிட்டத்தட்ட 4 திசையிலும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும். இந்த கேரவனை தான் பிரதமர் நரேந்திர மோடி மகாபலிபுரம் வரும்போது பயன்படுத்தினாராம். அதுமட்டுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏதாவது அவசர தேவைகள் என்றால் இந்த கேரவன் தான் அனுப்பப்படுகிறதாம்.
மேலும் செய்திகள்: சூர்யா, ஜோதிகா, தனுஷ், போன்ற நடிகர்கள் கலந்து கொண்ட ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி.! வைரலாகும் போட்டோஸ்!
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கேரவன் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டுள்ளதாம் . ஒரு மினி 7 ஸ்டார் ஹோட்டலை போல் ஆடம்பரமாய் இருக்கும் இந்த கேரவனில் மேக்கப் போடுவதற்கு என்றே தனியாக இரண்டு அறைகள் இருக்கிறதாம்.
அதுபோக இயக்குனர், தயாரிப்பாளர்கள் என எவரேனும் திடீரென வந்தால் அவர்களுக்கென்று ஒரு தனி ஒரு மீட்டிங் அறையும் இருக்கிறதாம். ஒவ்வொரு ரூமிற்கும், ஒவ்வொரு ஸ்பேர் ஏசி போடப்பட்டு உள்ளன. ஏதாவது அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது, ஏசி பழுதடைந்து விட்டால் அங்கே மாற்றுவது கடினம் அதனால் இத்தகைய செயல்பாடு.
மேலும் செய்திகள்: மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' இத்தனை கோடி வசூலா? வேற லெவலில் கெத்து காட்டும் தனுஷ்!
இந்த கேரவனை ஓட்டுவதற்கு என்றே பயிற்சி பெற்ற டிரைவர்கள் தான் பணி அமர்த்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி இதில் இருக்கும் டெக்னிகலான விஷயங்களையும் கையாளுவதற்கு தனி பயிற்சிகள் வழங்கப்பட்டு ஓட்டுனர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.
இத்தகைய சிறப்பம்சங்கள் இருந்தால்தான் கமல் சார் போன்றவர்களை திருப்திப்படுத்த முடியும் என கேரவன் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். தன்னுடைய மனதிற்கு ஏதாவது சரி இல்லை என்று தோன்றினாலும் அதையும் உடனே மாற்றி விடுவது கமலின் வழக்கம்.
மேலும் செய்திகள்: 60 ஆவது பிறந்தநாளை... திரையுலக நட்சத்திரங்களுடன் ஆடம்பரமாக கொண்டாடி.. அமர்களப்படுத்திய ராதிகா! போட்டோஸ்..!