- Home
- Cinema
- விஜய், அஜித்தெல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாதபடி பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படைத்துள்ள டாப் டக்கர் சாதனைகள்
விஜய், அஜித்தெல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாதபடி பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படைத்துள்ள டாப் டக்கர் சாதனைகள்
ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படைத்த டக்கரான பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கான முன்பதிவுகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே அண்மையில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நிறைய அனல் பறக்கு பேச்சுகளுடன் நடந்து முடிந்தது. இதில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த் பற்றி பேசுகையில், அவர் ரெக்கார்ட் பிரேக்கர் அல்ல ரெக்கார்ட் மேக்கர் என கூறி இருந்தார். அப்படி ரஜினி படங்கள் படைத்த டக்கரான சாதனைகள் பற்றி பார்க்கலாம்.
அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல்
தமிழ் சினிமாவில் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளிய படங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவது ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் தான். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.615 கோடி வசூலித்து இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ரஜினி படைத்த இந்த சாதனையை இன்னும் எந்த தமிழ் நடிகராலும் முறியடிக்கவே முடியவில்லை. அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் இதில் பாதி வசூலை தான் எட்டி வருகின்றன. ரஜினிக்கு அடுத்த இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் உள்ளது. இப்படம் ரூ.500 கோடி வரை வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... ரஜினி நடித்து 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் இத்தனையா?.. சூப்பர்ஸ்டாரின் இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது
அதிக நாள் ஓடிய படம்
தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நாள் திரையரங்கில் ஓடிய திரைப்படம் என்கிற சாதனைக்கு சொந்தக்காரரும் ரஜினி தான். அவர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சந்திரமுகி திரைப்படம் தான் அதிக நாள் ஓடிய திரைப்படம் ஆகும். இப்படம் மொத்தம் 890 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் 100 நாள் ஓடினாலே அதிசயமாக பார்க்கப்படுவதால், ரஜினியின் இந்த சாதனையையும் இனி யாராலும் முறியடிக்கவே முடியாது.
வெளிநாட்டில் அதிக மவுசுள்ள நடிகர்
மற்ற நடிகர்களைக் காட்டிலும் ரஜினிக்கு வெளிநாட்டிலும் மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது. அதிலும் குறிப்பாக ஜப்பானில் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானின் கடந்த 1998-ம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. அந்த சமயத்தில் அந்த நாட்டில் மட்டுமே அப்படம் ரூ.23.5 கோடி வசூலித்தது. ரஜினியின் இந்த சாதனையை எந்த ஒரு தமிழ் நடிகராலும் நெருங்க கூட முடியவில்லை.
இதையும் படியுங்கள்... சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்... முன்பதிவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? மாஸ் காட்டும் ஜெயிலர்