ரஜினி நடித்து 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் இத்தனையா?.. சூப்பர்ஸ்டாரின் இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் மூன்று நாட்கள் ஓடினாலே சக்சஸ் மீட்டை வைத்து விடுவார்கள். இதற்கு முன்னர் ஏராளமான திரைப்படங்கள் 100 நாள், 200 நாள் என ஓடி சாதனை படைத்திருக்கின்றன. தற்போது படங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டதால், தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் தாண்டி தியேட்டரில் ஓடினாலே அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்து 200 நாள், 300 நாள், 800 நாள் என ஓடி சாதனை படைத்த படங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
16 வயதினிலே
பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல் இருவருமே இணைந்து நடித்த திரைப்படம் 16 வயதினிலே. கடந்த 1977-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி திரைக்கு வந்த இத்திரைப்படம் வெற்றிகரமாக 200 நாட்கள் ஓடி உள்ளது.
பில்லா
ரஜினிகாந்தின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் பில்லாவும் ஒன்று. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இப்படம் கடந்த 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் அலங்கார், மகாராணி, மிட்லேண்ட் ஆகிய தியேட்டர்களில் 260 நாட்கள் ஓடியது.
மூன்று முகம்
ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து அதகளம் செய்த திரைப்படம் தான் மூன்று முகம். இப்படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். கடந்த 1982-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்த இப்படம் தேவி பேரடைஸ், கமலா, அகஸ்தியா, சக்தி அபிராமி ஆகிய தியேட்டர்களில் 225 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
Rajinikanth
தங்கமகன்
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தங்கமகன். ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இத்திரைப்படம் மதுரையில் மட்டும் 247 நாட்கள் சக்சஸ்புல்லாக ஓடி சாதனை படைத்து உள்ளது.
படிக்காதவன்
ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் படிக்காதவன். கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த இத்திரைப்படம் 210 நாட்கள் ஓடியது.
மனிதன்
ரஜினி நடிப்பில் 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் மனிதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இத்திரைப்படம் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
தர்மதுரை
ரஜினியின் மற்றுமொரு கமர்ஷியல் ஹிட் திரைப்படம் தான் தர்மதுரை. ராஜசேகர் இயக்கிய இத்திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. இப்படம் 211 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
இதையும் படியுங்கள்... பிறந்தநாள் முடிந்ததும் பிகினி பேபியாக மாறி... ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் வைத்த மாளவிகா மோகனன்
மன்னன்
ரஜினி - பி.வாசு கூட்டணி முதன்முதலில் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த திரைப்படம் தான் மனிதன். 1992-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்த இத்திரைப்படம் 301 நாட்கள் ஓடி அதிரி புதியான சாதனை படைத்தது.
பாட்ஷா
ரஜினியின் கெரியரில் மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது பாட்ஷா தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வந்த இத்திரைப்படம் கோவையில் மட்டும் 368 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அருணாச்சலம்
சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே திரைப்படம் அருணாச்சலம். இப்படம் கடந்த 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் சென்னையில் உள்ள ஆல்பர்ட், அபிராமி, உதயம், பாரத் ஆகிய தியேட்டர்களில் 204 நாட்கள் ஓடியது.
படையப்பா
ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமா கூட்டணியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த திரைப்படம் படையப்பா. இப்படம் கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது. இது திரையரங்கில் 270 நாட்கள் ஓடி அசத்தியது.
சந்திரமுகி
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் சந்திரமுகி. இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது. இப்படம் 156 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றிலேயே 890 நாட்கள் ஓடிய திரைப்படமும் இது மட்டும் தான்.
கபாலி
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி. இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வந்தது. இப்படம் மதுரையில் உள்ள மணி இம்பாலா தியேட்டரில் மட்டும் 275 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... என் படத்துக்கு யாரும் பிளாக்கில் டிக்கெட் வாங்காதீங்க... ஷூட்டிங் தொடங்கும் முன்பே அலப்பறை கெளப்பும் TTF வாசன்