- Home
- Cinema
- காசு பணமெல்லாம் வேணாம்... காதல் போதும்! இளம் நடிகர் மீதான காதலை கன்பார்ம் பண்ணிய தமன்னா - குவியும் வாழ்த்து
காசு பணமெல்லாம் வேணாம்... காதல் போதும்! இளம் நடிகர் மீதான காதலை கன்பார்ம் பண்ணிய தமன்னா - குவியும் வாழ்த்து
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் தமன்னா, காசு பணம் பார்க்காமல் இளம் நடிகரை காதலித்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அவர் நடிப்பில் தற்போது தமிழில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார் தமன்னா. நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதேபோல் இந்தியிலும் நடிகை தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்த வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் விஜய் வர்மா, கஜோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. இந்த வெப் தொடருக்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில் தனது காதல் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி இருக்கிறார் நடிகை தமன்னா.
இதையும் படியுங்கள்... முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி; ஆரம்பமாகும் பிக்பாஸ் சீசன் 7 - ஆண்டவர் ஆட்டம் எப்போது? சுட சுட வந்த அப்டேட்
இதுகுறித்து அவர் கூறியதாவது : “லஸ்ட் ஸ்டோரீஸ் ஷூட்டிங்கின்போது தான் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். என்னோடு நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள். அவர்கள் மீது எனக்கு எந்தவித ஈர்ப்பும் வரவில்லை. ஆனால் விஜய் வர்மா உடன் வந்துள்ளது என்றால் அது ஸ்பெஷல் தான். நான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இவர் தான். யாருக்காக நம்மை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கிறோமோ அவர் தான் நமக்கானவர். அப்படி விஜய் வர்மா எனக்கு உள்ளார். என்னுடைய மகிழ்ச்சியான இடமும் அவர்தான்” எனக்கூறி காதலை உறுதிப்படுத்தி உள்ளார் தமன்னா.
நடிகை தமன்னா புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும், விஜய் வர்மா தற்போது தான் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். தமன்னாவுக்கு ரூ.110 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஆனால் விஜய் வர்மாவுக்கு ரூ.17 கோடி சொத்துக்கள் தான் உள்ளன. இதன்மூலம் காதலுக்கு முன் காசு பணமெல்லாம் ஒன்றுமில்லை என நிரூபித்துக்காட்டி இருக்கும் நடிகை தமன்னாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.