600 கோடிக்கு மேல் வசூல் சாதனை..! ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகிகள்!
'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகிகளான தயாரிப்பாளர் சண்முக மூர்த்தி, இணை தயாரிப்பாளர் அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி ராஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படம் வெளியானது முதலே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், வசூலிலும் மாஸ் காட்டியது.
இது குறித்து தற்போது வரை வெளியாகி உள்ள தகவலில், ஜெயிலர் படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான பின்னரும் கூட, ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்காகவே பார்க்கப்படுகிறது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்துக்கு ஷேர்ராக 110 கோடி பணம் மற்றும் பிஎம்டபிள்யூ X மாடல் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
உள்ளாடை போடாமல்!! முதுகை முழுசாவும்... குட்டி தொப்பையை ஹெவியாகவும் காட்டிய தமன்னா! வைரல் வீடியோ!
அதேபோல் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மற்றும் அனிருத் ஆகியோருக்கு, குறிப்பிட்ட தொகையை பரிசாக வழங்கியது மட்டுமின்றி போர்ச் கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 100 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூபாய் 1 கோடி வழங்கி உள்ளனர். அதேபோல் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கும் கலாநிதி மாறனின் மனைவி காவிரி ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, 'ஜெயிலர்' படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகிகளான, ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.