ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லன் இவரா? அப்போ கார்த்திருக்குது செம்ம சம்பவம்!
Jailer 2 Villain: 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தலைவருக்கு வில்லனாக நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ரசிகர்களை கவர தவறிய கூலி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்மையில் வெளியான 'கூலி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதும்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர தவறி விட்டது. வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றதால், இப்படத்திற்கு 'A ' சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் காரணமாக குழந்தைகளோடு வந்து படம் பார்க்கும் பல ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க முடியாத நிலை உருவானது.
ஜெயிலர் 2:
அதே போல் லோகேஷ் கனகராஜ் கதையை எளிதில் புரியவில்லை என்கிற விமர்சனமும் எழுந்தது. வசூல் ரீதியாக இப்படம் ரூ.500 கோடியை கடந்தாலும், தோல்வி படமாகவே பார்க்கப்பட்டது. தற்போது ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' 2-ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள்:
உலகம் முழுவதும் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது. இரண்டாவது பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு, ஆகியோர் நடிக்கின்றனர். அதே போல் கேமியோ ரோலில் நடித்த மோகன் லால் மற்றும் சிவராஜ் குமாரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
வில்லனாகும் மிதுன் சக்ரவர்த்தி:
மேலும் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் இந்த பாகத்தில் இணைந்து நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா ரஜினிக்கு மெயின் வில்லனாக இருப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட் பிரபலம் ஒரு இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாரும் அல்ல, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தான். இவர் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.