ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமியா? நகை திருட்டில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரி விசாரணையில் கூறிய ஷாக்கிங் தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், வேலை செய்த ஈஸ்வரி என்கிற பெண் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், விசாரணையில் இவர் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறியதாக, வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த மாதம் 9-ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய லாக்கரில் வைக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த 3 வருடங்களாக இந்த லாக்கரை நான் திறந்து பார்க்கவில்லை என்றும், தன்னுடைய வீட்டில் வேலை செய்து வரும் மூன்று பேருக்கு, லாக்கரின் சாவி எங்கு இருக்கிறது என்பது தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் லாக்கர் உடைக்கப்படாமல், சாவியை போட்டு நகையை எடுத்துக்கொண்டு.. மீண்டும் அதே இடத்தில் சாவியை வைத்து வைத்திருந்ததால், இந்த நகை லாக்கர் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான் எடுத்திருக்க கூடும் என யூகித்த போலீசார், தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்யும் மூன்று பேரிடமும், தீவிர விசாரணை நடத்தினர்.
கையில் ஆஸ்கர் விருதை ஏந்திய பொம்மன் - பெல்லி..! மெய் சிலிர்த்த தருணங்களின் புகைப்படங்கள் இதோ..!
இந்த விசாரணையின் போது, மூவரின் சமீபத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து குறித்து சோதனை செய்த போது.. ஈஸ்வரி என்பவர் தன்னுடைய வருமானத்திற்கு மீறிய விதத்தில் நகை அடகு வைத்து, அந்த பணத்தை வங்கிக் கணக்கின் வழியாக பெற்றதும்... சுமார் ஒரு கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியதும் தெரிய வந்தது.
அதேபோல் அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் டிரைவராக வேலை செய்யும் நபருடன் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தை அவர் அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈஸ்வரியை கைது செய்த போலீசார், சொத்து பத்திரத்தை மீட்டது மட்டுமின்றி, அவரிடம் இருந்து 20 பவுன் நகையையும் கைப்பற்றி உள்ளனர். மேலும் அவர் அடகு வைத்த கடையிலும் விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஈஸ்வரியிடம் வழக்கத்திற்கு மாறாக அதிக பண வரவு உள்ளதை கண்டுபிடித்த அவரின் கணவர், திடீரென உனக்கு இவ்வளவு சொத்துக்கள்... வீடு மற்றும் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் அளவிக்கும் எப்படி பணம் வந்தது என கேட்டபோது, ஈஸ்வரி நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பினாமி என்றும், இது நம் பெயரில் இருந்தாலும் நமக்கு சொந்தமானது இல்லை. இதற்கு உரிமையானவர் ஐஸ்வர்யா என தெரிவித்துள்ளார். மேலும் இதற்காகவே தனக்கு பணம் கொடுத்ததாகவும் கூறி சமாளித்துள்ளார்.
இது குறித்த விசாரணையின் போது ஈஸ்வரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈஸ்வரியை தொடர்ந்து மட்டுமின்றி ஓட்டுனர் வெங்கடேசன் இடமிருந்தும், சுமார் நூறு சவரன் நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.