MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya 41 : சூர்யா - பாலா படத்தின் பாடல் காட்சி இணையத்தில் லீக் ஆனதா?... வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்

Suriya 41 : சூர்யா - பாலா படத்தின் பாடல் காட்சி இணையத்தில் லீக் ஆனதா?... வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்

Suriya 41 : சூர்யா 41 படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 20 2022, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இப்படம் கைவிடப்பட உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

34

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலாவுடன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டார் சூர்யா. இதையடுத்து இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் வேகமெடுக்க தொடங்கின. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்தி வருகின்றனர்.

44

இந்நிலையில், சூர்யா 41 படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சூர்யா 41 படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் உண்மையில் அது சூர்யா 41 படத்தின் வீடியோ இல்லையாம், காப்பான் பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... பீஸ்ட் படத்துக்கு ஆசைப்பட்டு பாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நெல்சன்... அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி. வி. பிரகாஷ் குமார்
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Recommended image3
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved