MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பீஸ்ட் படத்துக்கு ஆசைப்பட்டு பாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நெல்சன்... அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

பீஸ்ட் படத்துக்கு ஆசைப்பட்டு பாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நெல்சன்... அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

Director Nelson : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததும் இயக்குனர் நெல்சன் பாலிவுட் பட வாய்ப்பை தவறவிட்ட தகவல் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jun 20 2022, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். கடந்த 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நெல்சனுக்கு அனிருத் மூலம் நயன்தாராவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

பல வருட காத்திருப்புக்கு பின் கிடைத்த அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நெல்சன், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டியும் நிலவியது.

34

தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 29ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

44

இந்நிலையில், இப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் நெல்சன் தவறவிட்ட தகவல் வெளியாகி உள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் தான் குட்லக் ஜெர்ரி என்பதால் இப்படத்தையும் நெல்சன் இயக்கினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் விரும்பினார்களாம். இதன்மூலம் பாலிவுட்டுக்கு சென்றுவிடலாம் என்கிற ஆசையில் முதலில் சம்மதம் சொன்ன நெல்சன், பின்னர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததும், குட்லக் ஜெர்ரி படத்திலிருந்து விலகிவிட்டாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... PRIYANKA DESHPANDE : கணவருடன் விவாகரத்தா?.... முதன்முறையாக மனம்திறந்து பேசிய தொகுப்பாளினி பிரியங்கா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu vs Drishyam 3 Box Office Collection : கருப்பனிடம் சரண்டர் ஆன ஜார்ஜ்குட்டி... திரிஷ்யம் 3-ஐ விட அதிக வசூலை வாரிசுருட்டிய கருப்பு
Recommended image2
Trisha : விஜய், அஜித், சூர்யா... 3 பேருக்கும் திரிஷா தான் லக்கி சார்ம்! அடடே இப்படி ஒரு ஒற்றுமையா?
Recommended image3
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved