திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மகாலட்சுமி..? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட, தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில், மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே மகாலட்சுமி. பின்னர் மெல்ல மெல்ல, சீரியல் நடிகையாக மாறினார். அந்த வகையில்... இவர் நடித்த வாணி ராணி, ஆபீஸ், செல்லமே, உதிரிப்பூக்கள், போன்ற தொலைக்காட்சி தொடர்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீக்காமல் உள்ளது.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியலில் வில்லி வேடத்தில் மிரட்டி வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம், நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய், போன்ற படங்களை லிப்ரா புரோடக்க்ஷன் மூலம் தயாரித்த, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
இவர்கள் இருவரின் திருமண புகைப்படங்கள் வெளியான போது... இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்குமோ? என்று தான் பலர் நினைத்தனர். பின்னர் ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த பின்னர் தான், இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே திருமணம் ஆன தகவல் தெரிந்தது.
திருமணம் ஆன கையேடு, சூறாவளியாக சுற்றி இருவரும் பல ஊடகங்களுக்கு அடுத்தடுத்து பேட்டி கொடுத்தனர். அப்போது, மகாலட்சுமி, முடிந்தவரை சீக்கிரமாக குழந்தை பெற்று கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய இந்த முடிவால் ரவீந்தர் குடும்பத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளதாக கூறினார்.
அவ்வப்போது இருவரும், அடிக்கடி தங்களுடைய காதல் பொங்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இவரால் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரிதாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இந்த தகவலை தற்போது வரை மகாலட்சுமி - ரவீந்தர் தம்பதி உறுதி செய்யாத நிலையில், விரைவில் ரசிகர்களின் இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வைரலாகும் வரும் அந்த புகைப்படம் இது தான். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகாலட்சுமிக்கு சச்சின் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.