போலீசாரால் கைது செய்யப்பட்டாரா ஜிபி முத்து.. ! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோவால் பதறிப்போன ரசிகர்கள்
பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவை போலீசார் கைது செய்து கூட்டிச் செல்லும்படியான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து, டிக்டாக் மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன்காரணமாக கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஜிபி முத்து. முதல் வாரத்திலேயே பட்டைய கிளப்பிய அவர், இந்த சீசனில் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஜிபி முத்து. தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை, தன்னை வெளியே விடுமாறு பிக்பாஸிடம் கெஞ்சிக் கேட்டார். கமலும் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தும் மகன் மீதுள்ள பாசத்தால் அதனை ஏற்க மறுத்த ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ஜிபி முத்துவை போலீசார் கைது செய்து கூட்டிச் செல்லும்படியான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அது பிராங்க் வீடியோ என தெரியாமல் ஜிபி முத்துவின் ரசிகர்கள் சற்று பதறிப்போனார்.
இதையும் படியுங்கள்... திடீரென விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய சன் பிக்சர்ஸ்.. ‘டிஎஸ்பி’ பட போஸ்டர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜிபி முத்து சமீபகாலமாக புது படங்களின் புரமோஷனுக்காகவும் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்துக்காக இயக்குனர் பிரதீப் உடன் சேர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ வேறலெவலில் வைரல் ஆனது. இதையடுத்து தற்போது பரோல் படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.
அந்த வீடியோவில் தொடக்கத்தில் போலீஸ் கெட் அப்பில் இருக்கும் இருவர் ஜிபி முத்துவை கைது செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இது பிராங்க் வீடியோ என்று தெரியாத ரசிகர்கள் சிலர் ஜிபி முத்து உண்மையிலேயே கைதாகிவிட்டார் என பதறிப்போயினர்.
இதையும் படியுங்கள்... கலகத் தலைவன் இயக்குனர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த உதயநிதி.. மேடையிலேயே பதிலடி தந்த மகிழ் திருமேணி