திடீரென விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய சன் பிக்சர்ஸ்.. ‘டிஎஸ்பி’ பட போஸ்டர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்த படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் திடீரென வெளியேறியதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பொன்ராம். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இவர், அடுத்ததாக ரஜினி முருகன் படத்தை இயக்கி அதன் மூலமும் வெற்றிவாகை சூடினார். இதையடுத்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் முனைப்பில் சீமராஜா படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார்.
ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு அடுத்த படியாக இவர் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் படமும் தோல்விப் படமாகவே அமைந்தது. இதன்பின்னர் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்தார் பொன்ராம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்கிற நடிகை நடித்துள்ளார்.
பிக்பாஸ் ஷிவானி, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை vjs 46 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... இன்று வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்திற்கே டஃப் கொடுக்கும்... 'லவ் டுடே' 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு போலீஸ் கெட் அப்பில் விஜய் சேதுபதி மாஸாக பைக்கில் வரும்படியான புகைப்படம் அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாக தான் இதற்கு முன்னர் வரை கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் ஒரு இடத்தில் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் இப்படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியேறியது உறுதியாகி உள்ளது. ஆனால் எதற்காக வெளியேறினர் என்பது இதுவரை தெரியவில்லை. இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... கலகத் தலைவன் இயக்குனர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த உதயநிதி.. மேடையிலேயே பதிலடி தந்த மகிழ் திருமேணி