ஒத்த செருப்புக்காக ஆஸ்கரில் 20 லட்சத்தை இழந்தேன்.! ஆனால் இரவின் நிழல்? - ஆஸ்கர் அரசியலை பேசிய பார்த்திபன்!
ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சுமார் 10 இந்திய படங்கள் உட்பட மொத்தம் 301 படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், ஆஸ்கர் அரசியல் குறித்து பேசும் விதமாக பார்த்திபன் போட்டுள்ள ட்விட்டர் பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திரையுலகினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. ஆண்டுதோறும் உலகளவில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, என பல்வேறு பட்டியலின் அடிப்படையில்... இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளதால், இதற்கான பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்ற படங்களில், 301 திரைப்படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்கர் குழு தற்போது அறிவித்துள்ளது. இதில் 10 இந்திய திரைப்படங்களும் அடங்கும். குறிப்பாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஆர் ஆர் ஆர்' , ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'காந்தாரா', நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான, 'இரவின் நிழல்' மாதவன் நடித்து இயக்கிய 'ராக்டரி ', அலியா பட் நடித்த பாலிவுட் திரைப்படமான 'கங்குபாய் கத்தியவாடி', 'தி காஷ்மீர் பைல்ஸ்' மற்றும் குஜராத்தி படமான 'தி செல்லோ ஷோ' ஆகியவை அடங்கும்.
விபத்தில் சிக்கிய 'இனியா' சீரியல் நடிகை ஆல்யா மானசா! கால் எலும்பு முறிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்த பரிந்துரை பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் ஷாட் லிஸ்டில் உள்ளது. எனவே இப்படம் ஆஸ்கர் விருதை பெற வாய்ப்புகள் அதிகம். இதற்க்கு ஆர் ஆர் ஆர் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், ஆஸ்கர் அரசியல் குறித்து பேசும் விதமாக பாதிப்பின் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "Oscars eligible list-ல் மட்டுமே‘இரவின் நிழல்’ இருக்கிறது.ஆனால், RRR - Oscars short list-லேயே இருக்கிறது.வெற்றி வாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே! ஆனால் அதற்காக (அப்படத்திற்கு மட்டுமல்ல எல்லா ஹாலிவுட் படங்களுக்கும் கூட) மிகப் பெரிய செலவில் அங்கிருக்கும் agency மூலம் campaign செய்யப்படுவது (சினிமா) உலகறிந்த உண்மை.
திரு ராம், திரு விக்னேஷ் சிவன், திரு வெற்றிமாறன் போன்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால் (the budget of oscars was more than the budget of visaranai) தெரியும். RRR- pan indian film என்ற (மா)வட்டத்தை எல்லாம் தாண்டி உலக அரங்கின் கவனம் ஈர்த்திருப்பது நாம் கௌரவத்துடன் கொண்டாடப் படவேண்டியது. அப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்த படத்திற்கே பல கோடிகளில் campaign செய்ய வேண்டியுள்ளது. பெரும் பட்ஜெட் மாபெரும் கலக்ஷன் வந்த படத்திற்கு அந்த செலவு சிறிது. ஆனால் அந்த அங்கீகாரம் அவசியம்.
Otha Seruppu
அவ்வசியத்திற்கு தேவையான மை (டாலரில் ரூபாய்) கைவசம் இல்லாத்தால் ஒருமுறை இரவின் நிழல் spl screening செய்ய 5 லட்சம் கேட்டும், அப்படி எந்த spl-ம் இந்த முறை வேண்டாம். (சென்ற முறை‘ஒத்த செருப்பு’க்கு நானே ரசூலுடன் los angles சென்று 20 லட்சம் loss செய்து screening செய்து பத்து பேரையாவது பார்க்க வைத்து போராடினேன்) எனக் கூறிவிட்டேன். அப்படியிருந்தும் “அப்படியா? லிஸ்ட்டில் நம் பெயர் உள்ளதா?” என்ற ஆச்சர்யமே ஆனந்தமே! விருதின் மதிப்பறிந்தவன் நான் என்பதால்,RRR-ன் உச்சபட்ச மதிப்பறிந்தவன். குறைவாக மதிப்பிட்டால் அது என்னையே குறைத்து மதிப்பிடுதலுக்கு சமம்
“உலகத்தில் பணத்தை விட பெரிய விஷயம் நிறைய இருக்கு, அது எல்லாத்தையும் பணத்தாலதான் வாங்க முடியும்”- இரவின் நிழல் விசன வசனம் Campaign என்பது பணம் செலவழித்து அப்படைப்பை சம்மந்தப்பட்டவர்களின் கண்களுக்குள் பொறுத்துவது தகுதியுடன் உயரம் தொட்டிருக்கும் RRR உச்சம் தொடவது நமக்கெல்லாம் பெருமையே!" என தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.