டாப் 10 பணக்கார சினிமா பிரபலங்கள்... அடடே இந்த லிஸ்டில் கூலி பட நடிகரும் இருக்காரே..!
இந்தியாவின் முதல் 10 பணக்கார நட்சத்திரங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் நடிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். ஒரே ஒரு நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார்.

Top 10 Richest actors in India
சினிமா உலகம் பணம் கொட்டும் ஒரு இடமாகும். மற்ற துறைகளை விட சம்பள விஷயத்தில் சினிமா துறை முன்னணியில் உள்ளது. விளம்பரங்கள் மற்றும் பிற தொழில்களில் இருந்து வரும் வருமானமும் சினிமா நட்சத்திரங்களை பெரும் செல்வந்தர்களாக மாற்றுகிறது. சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்ட பல நட்சத்திரங்கள் இந்தியாவிலும் உள்ளனர். பணக்கார நடிகர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை அறிவது சுவாரஸ்யமாக இருக்கும்.
முதலிடத்தில் ஷாருக்கான்
இந்திய நட்சத்திரங்களில் ஷாருக் கான் தான் மிகப்பெரிய பணக்காரர். நடிகர் ஷாருக் கானுக்கு 7300 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக ஐஎம்டிபி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளராகவும் ஷாருக் கான் உள்ளார். ஐபிஎல்-இல் அவரது பங்களிப்புதான் மற்றவர்களை விட பாலிவுட் நடிகரின் செல்வம் அதிகரிக்க முக்கிய காரணம். ஷாருக் கானுக்கு சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. ஷாருக் ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
கோடிகளை குவித்துள்ள பாலிவுட் நடிகர்கள்
பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் மற்றொரு பாலிவுட் நடிகர் தான் உள்ளார். சல்மான் கான் தான் சொத்து மதிப்பில் இந்திய நட்சத்திரங்களில் ஷாருக் கானுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சல்மான் கானின் சொத்து மதிப்பு 6270 கோடி ரூபாய். மூத்த நடிகர் அமிதாப் பச்சன் சொத்து மதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு 5900 கோடி ரூபாய்.
லிஸ்டில் உள்ள ஒரே ஒரு நடிகை
சொத்து மதிப்பில் நான்காவது இடத்தில் யார் இருக்கிறார் என்று தெரிந்தால் சினிமா ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள். தற்போது சினிமாவில் அவ்வளவாக தீவிரமாக இல்லாத நடிகை ஜூஹி சாவ்லா தான் நான்காவது இடத்தில் உள்ளார். ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு 4600 கோடி ரூபாய். நடிப்பைத் தவிர, ஜூஹிக்கு பல வருமான வழிகள் இருப்பது அவரை சொத்து மதிப்பில் முன்னணியில் கொண்டுவர உதவியது.
ஷாருக் கானின் கீழ் உள்ள ரெட் சில்லீஸ் குழுமத்தின் இணை நிறுவனர் ஜூஹி. ஷாருக்கானுடன் ஐபிஎல் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களிலும் ஜூஹி முதலீடு செய்துள்ளார். இந்தியாவின் பணக்கார நடிகை என்ற பெருமையும் ஜூஹி சாவ்லாவுக்கு உரியது.
கூலி பட நடிகர்
ஐந்தாவது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் உள்ளார். ஹிருத்திக் ரோஷனின் சொத்து மதிப்பு 4500 கோடி ரூபாய். ஆறாவது இடத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அக்ஷய் குமார் உள்ளார். அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு 4000 கோடி ரூபாய். ஏழாவது இடத்தில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான அஜய் தேவ்கன் உள்ளார். அஜய் தேவ்கனின் சொத்து மதிப்பு 3850 கோடி ரூபாய்.
எட்டாவது இடத்தில் பாலிவுட்டின் மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் அமீர் கான் உள்ளார். அமீர் கானின் சொத்து மதிப்பு 3200 கோடி ரூபாய். ஒன்பதாவது இடத்தில் ஒரு தென்னிந்திய நடிகர் உள்ளார். ஒன்பதாவது இடத்தில் உள்ள சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய். பத்தாவது இடத்தில் உள்ள தென்னிந்திய நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் சொத்து மதிப்பு 2200 கோடி ரூபாய்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

