- Home
- Cinema
- தமிழனால் பாக்ஸ் ஆபிஸில் தலைநிமிர்ந்து நிற்கும் ஷாருக்கான்... பாலிவுட் ‘பாட்ஷா’வின் டாப் 7 மூவீஸ் இதோ
தமிழனால் பாக்ஸ் ஆபிஸில் தலைநிமிர்ந்து நிற்கும் ஷாருக்கான்... பாலிவுட் ‘பாட்ஷா’வின் டாப் 7 மூவீஸ் இதோ
ஷாருக்கான் தனது சினிமா வாழ்க்கையில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவருடைய திரைப்பயணத்தில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 7 படங்களைப் பற்றி இங்கே காணலாம்.

Highest Grossing Movies Of Shah Rukh Khan
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் பாக்ஸ் ஆபிஸில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதில் உலகளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 7 படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜவான்
2023ல் வெளியான 'ஜவான்' திரைப்படம் தான் ஷாருக்கானின் அதிக வசூல் செய்த படமாகும். இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.640.25 கோடி வசூலித்தது. உலகளவில் ரூ.1148 கோடி வசூலித்தது. இப்படத்தை கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார்.
பதான்
2023ல் வெளியான 'பதான்' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.543.09 கோடி வசூல் செய்தது. இப்படம் உலகளவில் ரூ.1050 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார்.
டங்கி
2023ல் வெளியான 'டங்கி' திரைப்படம் இந்தியாவில் ரூ.227 கோடி வசூல் செய்தது. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இப்படம் உலகளவில் ரூ. 458.69 கோடி வசூலை வாரிக்குவித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை எக்ஸ்பிரஸ்
காமெடி டிராமா படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.227.13 கோடி வசூலித்தது. உலகளவில் ரூ.422 கோடி வசூல் செய்துள்ளது.
ஹாப்பி நியூ இயர்
2014ல் வெளியான 'ஹாப்பி நியூ இயர்' திரைப்படம் இந்தியாவில் ரூ.199.95 கோடி வசூலித்தது. இப்படம் உலகளவில் ரூ.397 கோடி வசூலித்து இந்த லிஸ்ட்டில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
தில்வாலே
'தில்வாலே' திரைப்படமும் இந்தப் பட்டியலில் உள்ளது. இப்படம் இந்தியாவில் ரூ.148.42 கோடி வசூல் செய்தது. உலகளவில் ரூ.376.85 கோடி வசூலித்த இப்படம் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
ரயீஸ்
2017ல் வெளியான ஷாருக்கானின் 'ரயீஸ்' திரைப்படம் இந்தியாவில் ரூ.164.63 கோடி வசூல் செய்தது. உலகளவில் ரூ.281.44 கோடி வசூலித்த இப்படம் ஏழாம் இடத்தில் உள்ளது.