கிடப்பில் போடப்படும் இந்தியன் 3? கமல் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 3 படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Indian 3 Movie Update : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பான் இந்தியா அளவில் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்தனர். இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் கிரிஞ்சாக இருந்ததால் படத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர்.
Kamal, Shankar
இந்தியன் 2 படத்தால் அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன் 3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும். ஆனால் இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என சொன்னாராம் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஆள விடுங்கடா சாமி; இந்தியன் 3 படத்தில் இருந்து வெளியேறிய லைகா?
Indian 3 Update
அடுத்தடுத்த தோல்விகளால் நிதி நெருக்கடியில் சிக்கிய லைகா நிறுவனம், தங்களுக்கு இந்தியன் 3 படமே வேண்டாம் என சொல்லி அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம். இதனால் இந்தியன் 3 படம் திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் ஷங்கருக்கான சம்பள பிரச்சனையை பேசி முடித்து, அதன்பின் படப்பிடிப்பு நடத்தி அதை ரிலீஸ் செய்வதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
Indian 3 shelved?
இதனால் இந்தியன் 3 படம் கிடப்பில் போடப்பட சான்ஸ் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு இதுபற்றி எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்தியன் 3 படத்தில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வாலும் நடித்துள்ளார். இந்தியன் 2 புரமோஷனின் போதே தனக்கு 2ம் பாகத்தை விட 3ம் பாகம் தான் மிகவும் பிடித்திருந்தது என கமல் சொல்லி இருந்தார். தற்போது அவருக்கு பிடித்த அந்த 3ம் பாகம் ரிலீசாவதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்... தியேட்டரா? ஓடிடியா? இந்தியன் 3 ரிலீஸ் குறித்து மனம்திறந்த ஷங்கர்