விடுதலை 2 முதல் இந்தியன் 2 வரை : 2023-ல் மட்டும் இத்தனை இரண்டாம் பாக படங்களா? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..!
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாக படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள இரண்டாம் பாக படங்கள் பற்றி இந்த லிஸ்ட்டில் பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் 2
2023-ம் ஆண்டு முதலில் ரிலீஸ் ஆக உள்ள பார்ட் 2 திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தை சசி இயக்கி இருந்தார். தற்போது உருவாகி இருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரஜினி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஜிகர்தண்டா 2
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றிவாகை சூடிய திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படமும் இந்தாண்டு ரிலீஸாக உள்ளது.
இதையும் படியுங்கள்... முதல்வர் ஸ்டாலினிடம் எகிறிய பிக்பாஸ் பாலாஜி... பீர் குளியல் வீடியோவை வெளியிட்டு வச்சுசெய்யும் நெட்டிசன்கள்
சார்பட்டா பரம்பரை 2
பா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 31-ந் தேதி ரிலீசாக உள்ளது. அப்படம் வெளியான அடுத்த மூன்று மாதத்தில் அதன் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்தியன் 2
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்,
டிமாண்டி காலனி
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸாகி வெற்றியடைந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவே தயாரித்து இயக்கி வருகிறார். இப்படமும் விரைவில் திரைகாண உள்ளது.
தலைநகரம் 2
சுந்தர் சி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற படம் தலைநகரம். அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வி.இசட் துரை இயக்கி வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... 1300 கோடி சொத்துக்கு அதிபதி... சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா ராம்சரண்? - வியக்க வைக்கும் பின்னணி