1300 கோடி சொத்துக்கு அதிபதி... சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா ராம்சரண்? - வியக்க வைக்கும் பின்னணி
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம்சரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரணும் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த ராம்சரண், ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அவரை உலகளவில் பிரபலமாக்கியது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பின்னர் ராம்சரணின் மார்க்கெட் வேறலெவலுக்கு சென்றுவிட்டது.
ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு முன்னர் வரை ரூ.35 முதல் 40 கோடி வரை வாங்கி வந்த ராம்சரண், தற்போது தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டார். ராம்சரண் நடிப்பில் தற்போது கேம் சேஞ்சர் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ராம்சரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரபலங்கள் பலரும் ராம்சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராம்சரணின் சொத்துமதிப்பு குறித்தும் அவரது கார் கலெக்ஷன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் ராம்சரண் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் என்பதனால் அவரது சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே சேரும். சமீபத்திய தகவல்படி நடிகர் ராம்சரணின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 25000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம்சரண் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி இருக்குமாம்.
இதையும் படியுங்கள்... மாஸ் வீடியோ உடன்... ராம்சரண் உடனான பிரம்மாண்ட படத்தின் டைட்டிலை அறிவித்த இயக்குனர் ஷங்கர்
அதுமட்டுமின்றி நடிகர் ராம்சரணுக்கு கார்கள் மீது அதீத பிரியம் உண்டு. இதன் காரணமாக இவர் ஏராளமான கார்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளார். இவர் ஆடி மார்ட்டின் வி8 வான்டேஜ், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ரேஞ்ச் ரோவர், ஆஸ்டன் மார்ட்டின், ஃபெராரி போர்டோபினோ போன்ற பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் வைத்திருக்கும் மெர்சிடிஸ் மேபேஜ் GLS 600 காரின் விலை மட்டும் சுமார் 4 கோடி இருக்குமாம்.
நடிகர் ராம்சரண் படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமும் பலகோடி சம்பாதித்து வருகிறார். இவர் மொத்தம் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருந்து வருகிறார். தோராயமாக ஒரு விளம்பரத்திற்கு இவர் ரூ.1.8 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம் ராம்சரண்.
இவர் உபாசனா என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரும் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் ஆவார். கடந்த 11 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த தம்பதி தற்போது தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறது. தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விருது வென்ற... நாட்டு நாட்டு பாடலுக்கு நடனத்தில் பட்டையை கிளப்பிய இளம்பெண்! வைரலாகும் வீடியோ!