முதல்வர் ஸ்டாலினிடம் எகிறிய பிக்பாஸ் பாலாஜி... பீர் குளியல் வீடியோவை வெளியிட்டு வச்சுசெய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

biggBoss fame Balaji murugadoss trolled for challenging CM MK stalin

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த சீசனில் ஆரியுடன் சண்டைபோட்ட பேமஸ் ஆன பாலாஜி, பைனலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். பிக்பாஸ் 4 பைனலில் தோற்றாலும், அடுத்ததாக சிம்பு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி டைட்டிலையும் வென்று அசத்தினார்.

இவர் தற்போது சினிமாவிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி, டுவிட்டரில், நேற்று ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து, பிளீஸ் டாஸ்மாக்கை மூடுங்கள். ஆன்லைன் ரம்மியை விட அது நிறைய பேரின் உயிரை பறிக்கிறது. மதுவால் குடும்பத்தை இழந்து தமிழ்நாட்டில் என்னைப் போன்று ஏராளமான ஆதரவற்றோரும் உருவாகிறார்கள். என்னை அரசியலுக்கு இழுத்துவிடாதீர்கள். உங்களால் என்னை சமாளிக்க முடியாது” என பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்... திடீரென பிளானை மாற்றிய அஜித்... தள்ளிப்போகும் ஏகே 62..! ஷூட்டிங் எப்போ ஆரம்பம்? சுடசுட வெளிவந்த அப்டேட் இதோ

பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட் வைரலானதை அடுத்து, அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பழைய வீடியோவை தேடிக் கண்டுபிடித்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவர் நீச்சல் குளத்தில் பீரை தலையில் ஊற்றி குளிக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருக்கும். இதை பதிவிட்டு என்ன புரோ இதெல்லாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஒரு சிலரோ, பாவம் ஷாம்பு வாங்க கூட காசு இல்லபோல என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். டாஸ்மாக் பற்றி பேசிவிட்டு அவரே பீரில் உல்லாச குளியல் போடுவதை பார்த்த நெட்டிசன்கள் ஊருக்கு தான் உபதேசமா உங்களுக்கு இல்லை என பாலாஜி முருகதாஸுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலாஜி முருகதாஸின் பீர் குளியல் வீடியோ தான் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Watch : ஆக்ரோஷமான வெற்றிமாறன்... பயங்கரமாக அடிவாங்கிய சூரி - மிரள வைக்கும் ‘விடுதலை’ மேக்கிங் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios