திடீரென பிளானை மாற்றிய அஜித்... தள்ளிப்போகும் ஏகே 62..! ஷூட்டிங் எப்போ ஆரம்பம்? சுடசுட வெளிவந்த அப்டேட் இதோ
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. அதோடு இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறி இருந்தனர். ஆனால் இந்த கூட்டணி ஷூட்டிங்கை தொடங்க இருந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர்.
விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி உள்ளதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வைத்துள்ளது லைகா. அப்படத்திற்கான அப்டேட் இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் தற்போது அதிரடி மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்தின் தந்தை மரணமடைந்ததனால் தான் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.
இதையும் படியுங்கள்... 10 பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பதாக கூறிய ஜெயிலர் பட நடிகரை விவாகரத்து செய்து பிரிந்த மனைவி
தந்தையை இழந்த சோகத்தில் அஜித் இருப்பதனால் அப்படத்திற்கான அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என முடிவெடுத்து அதனை அடுத்த மாதத்திற்கு லைகா நிறுவனம் தள்ளிவைத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏப்ரல் மாதத்தில் தான் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. குறிப்பாக விஜய்யின் லியோ படத்தின் அப்டேட் எப்படி வெளியானதோ அதைவிட பிரம்மாண்டமாக இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் கசிந்துள்ளது.
ஏப்ரல் மாதம் அறிவிப்பு வந்தாலும் படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே மாதம் தான் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1-ந் தேதி வருவதால், அன்றைய தினம் கொண்டாட்டத்துடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படலாம் என தெரிகிறது. ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதால், அப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 1300 கோடி சொத்துக்கு அதிபதி... சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா ராம்சரண்? - வியக்க வைக்கும் பின்னணி