MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Independence Day 2024 : சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய தேசபக்தி படங்கள் லிஸ்ட் இதோ

Independence Day 2024 : சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய தேசபக்தி படங்கள் லிஸ்ட் இதோ

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த தேசபக்தி படங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Aug 13 2024, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamil Patriotic Movies

Tamil Patriotic Movies

இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதைப்போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினம் இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ் சினிமாவில் வெளிவந்த தேசபக்தியை உணர்த்தும் படங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Roja

Roja

ரோஜா

தேசப்பற்றையும், காதலையும் ஒருசேர காட்டிய திரைப்படம் ரோஜா. மணிரத்னம் இயக்கிய இந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் கடந்த 1992-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

36
Indian

Indian

இந்தியன் 

கமலஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இந்த பிரம்மாண்ட படைப்பு காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு காரணம் அதன் திரைக்கதை தான். அந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் வரும் சேனாபதி கேரக்டர் சுதந்திரப் போராட்ட வீரராகவே காட்டப்பட்டு இருக்கும். ஊழலுக்கு எதிரான அவரின் களையெடுப்பு தான் இந்தியன் படத்தின் மையக்கரு.

இதையும் படியுங்கள்... அஜித்.. சூர்யா மாதிரி உங்களுக்கு பெரிய Fan Base இல்லையே ஏன்? சர்ச்சை கேள்வி - ஹெட் ஷாட் பதில் தந்த "தங்கலான்"!

46
Jaihind

Jaihind

பாம்பே

ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிரத்னமும், அரவிந்த்சாமியும் இணைந்து பணியாற்றிய படம் தான் பாம்பே. மனிதர்கள் எல்லாரும் சமமே, அவர்களை சாதி, மதம் என பிரிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் தேசப்பற்றை உணர்த்தும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். குறிப்பாக கலவரத்திற்கு பின் மக்கள் சாதி, மத பேதமின்றி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் கண்களை கலங்கச் செய்யும்.

56
Bombay

Bombay

ஜெய்ஹிந்த்

சுதந்திர தினம் என்றாலே ஜெய்ஹிந்த் படம் தொலைக்காட்சிகளில் கண்டிப்பாக ஒளிபரப்பப்படும். அந்த அளவுக்கு தேசப்பற்றோரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கி, ஹீரோவாக நடித்த இப்படத்தில் ரஞ்சிதா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் சதித்திட்டம் தீட்டும் பயங்கர வாதிகளை போலீஸ் அதிகாரியான அர்ஜுன் எப்படி சமாளித்தார் என்பதை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் படமாக்கி இருந்தனர். இப்படத்தையும் சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாம பாருங்க.

66
Siraichalai

Siraichalai

சிறைச்சாலை

சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதைகளைப் கண்முன் காட்டிய திரைப்படம் தான் சிறைச்சாலை. இப்படத்தில் மோகன்லால், பிரபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆயுள் தண்டனை கைதிகளாக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் சிறைச்சாலை படத்தின் கதை. சிறையில் ஆங்கிலேயர்கள் எந்த அளவு கொடுமைப்படுத்தினார்கள் என்பதை தோலுரித்து காட்டிய திரைப்படம் இது.

இதையும் படியுங்கள்... "ஏன் இப்படி தவறான தகவலை பரப்புறீங்க? ப்ளீஸ் வேண்டாம்.. இளையராஜா மருமகளின் திடீர் பதிவு - என்ன ஆச்சு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved