அஜித்.. சூர்யா மாதிரி உங்களுக்கு பெரிய Fan Base இல்லையே ஏன்? சர்ச்சை கேள்வி - ஹெட் ஷாட் பதில் தந்த "தங்கலான்"!
Thangalaan : தங்கலான் திரைப்படம் இன்னும் 3 நாள்களில் வெளியாகவுள்ள நிலையில், அப்படக்குழுவினர் இப்பொது தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
sethu
தமிழ் சினிமாவை பொறுத்தவரை உச்சத்தில் உள்ள பிற நடிகர்களை ஒப்பிடும் பொழுது, சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, அதில் மாபெரும் வெற்றி கண்ட ஒரு நடிகர் தான் விக்ரம். அவருடைய நடிப்பில் வெளியான சேது, காசி தொடங்கி ஐ மற்றும் தங்கலான் வரை, தனது தனித்துவமான நடிப்பால் கோலிவுட் ரசிகர்களை ஈர்க்க எப்போதுமே விக்ரம் மறந்ததில்லை.
எங்க பாதி சட்டையை காணோம்? தச்சு கிழிச்ச ஆடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - வைரல் பிக்ஸ்!
Thangalaan
இந்த சூழலில் முதல் முறையாக பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள "தங்கலான்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆங்கிலேயர் காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த திரைப்படம் வெளியாகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் விக்ரமிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட சர்ச்சையான கேள்விக்கு மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார் விக்ரம்.
ajith and suriya
"அஜித் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுக்கு இருப்பதை போல பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உங்களிடம் இல்லாததற்கு என்ன காரணம்"? என்ற கேள்வியை அந்த செய்தியாளர் முன்வைக்க, "என்னுடைய ரசிகர்கள் கூட்டம் பற்றி உங்களுக்கு தெரியாது, தங்கலான் படத்திற்கு வந்து பாருங்கள், டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் உங்களுக்கு டிக்கெட் வாங்கி தருகிறேன்" என்று அவர் கூற...
actor vikram
செய்தியாளர் கூட்டத்திலிருந்த விக்ரமின் ரசிகர் ஒருவர், அஜித் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுக்கு Haters நிறையவே இருக்கிறார்கள். ஆனால் Haters என்று யாருமே இல்லாத ஒரு நடிகர் நீங்கள் தான் என்று கூறினார், அவருக்கு நன்றி சொல்லி, அவரை அமைதிப்படுத்திய விக்ரம், "இங்கு நம்பர் 1,2,3 என்று எதுவுமே இல்லை, நான் சாதிக்க வேண்டிய பல விஷயங்களை முன்பே சாதித்து விட்டேன். என் ரசிகர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் என் திரைப்படத்திற்கு வந்து பாருங்கள்", என்று கூறி அந்த செய்தியாளரை வாயடைக்க செய்தார் விக்ரம்.
என் விரதத்தை கலைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்; ஆதிசேஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்