"ஏன் இப்படி தவறான தகவலை பரப்புறீங்க? ப்ளீஸ் வேண்டாம்.. இளையராஜா மருமகளின் திடீர் பதிவு - என்ன ஆச்சு?
Karuna Vilasini : சின்னத்திரை நாடகங்கள் மற்றும் இசை கச்சேரிகள் என்று மிகவும் பிசியாக இருப்பவர் தான் இசைஞானி இளையராஜாவின் மருமகள் கருணா விலாசினி.
Actress Vilasini
தமிழ் சினிமாவின் மிக மூத்த இசையமைப்பாளர் தான் இளையராஜா. இவருடைய குடும்பத்தில் பலரும் இப்போது கலை உலகத்தில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக இளையராஜாவின் குடும்பத்தில் பல பாடகர்கள் உள்ளனர். அண்மையில் மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, ஒரு தேசிய விருது வென்ற பாடகி என்பதும் பலர் அறிந்ததே.
மகன்களை இடுப்பில் வைத்துக்கொண்டு ஜாலியாக ரேம்ப் வாக் வந்த நயன்தாரா - வைரலாகும் வீடியோ
Vilasini Karuna
அந்த வகையில் அவருடைய மனைவி ஜீவாவின் சகோதரர் கருணாவின் மகள் தான் விலாசினி. தற்பொழுது சின்னத்திரை நாடகங்களிலும், வெள்ளி திரையில் ஒரு சில பாடல்களையும் பாடி பிரபலமடைந்துள்ளார். அண்மையில் பாடகி பவதாரணி மறைந்த போது, அவர் குறித்த பல விஷயங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டது விலாசினி என்பது குறிப்பிடத்தக்கது.
Singer Vilasini
பாடகி பவதாரணி தனது தாய்மாமன் கருணா மற்றும் அவருடைய மகள் விலாசினி ஆகிய இருவரும் மீதும் பெரிய அளவில் அன்பு கொண்டிருந்ததாகவும், தன்னுடைய இறுதி காலகட்டத்தில் விலாசினியையும் அவருடைய தந்தையையும் சந்தித்த அவர் மனம் விட்டு அழுது தல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அண்மையில் விலாசினியின் தந்தை கருணா ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Vilasini Statement
அதில் "தான் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டதாகவும், இனி நான் இந்தியாவிற்கு வரப் போவதில்லை என்றும் சில தகவல்கள் தொடர்ச்சியாக பரவி வருகிறது. ஆனால் நான் எப்போதும் போல சென்னையில் தான் இருக்கிறேன். தொடர்ச்சியாக என்னுடைய நடிப்பு, இசை பயணம், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்".
"என்னைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்னை அழைத்து தாராளமாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மாறாக என்னைப் பற்றிய தவறான தகவல்கள் எதையும் தயவு செய்து பரப்ப வேண்டாம்" என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
சாவித்ரி, ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் லேடி சூப்பர் ஸ்டார்ஸ்..