லிரிக்ஸ்.. டியூன்.. வாய்ஸ்.. "டாப் ஸ்டாருக்காக" அப்போவே சூப்பர் சம்பவம் செய்த இசைஞானி - எந்த பாடலில் தெரியுமா?
Top Star Prashanth : இன்று பெரிய அளவில் பிரபலமாக இல்லை என்றாலும், தல.. தளபதி என்ற இரு துருவங்கள் டாப் லெவலுக்கு வரும் முன்பே டாப் ஸ்டாராக அசத்தியவர் தான் பிரஷாந்த்.
Actor Prashanth movies
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் விளங்கி வந்தவர் தான் தியாகராஜன். அவர் தன்னுடைய மகனை, ஒரு சிறந்த கலைஞனாக தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்தார். கடந்த 1990ம் ஆண்டு தமிழில் வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாக தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர் தான் பிரசாந்த். ராதா பாரதி என்பவற்றின் முதல் திரைப்படம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரசாந்தை பொறுத்தவரை அவர் திரைத்துறையில் அறிமுகம் ஆகும் பொழுதே, நடனம், சண்டை என்று பல விஷயங்களை தொழில்முறையாக கற்றுக்கொண்டு திரையுலகில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. பரதநாட்டியம் உள்ளிட்ட சில நடன கலைகளையும் கூட நேர்த்தியாக ஆடத் தெரிந்தவர் பிரசாந்த். தமிழ் திரையுலகில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே டாப் நடிகராக அவர் மாறினார்.
ப்ரோஸ்தெடிக் மேக்கப் முதல் DSS Tech வரை - இந்திய சினிமாவில் புரட்சி செய்த "ஆண்டவரின்" ஐந்து படங்கள்!
Jeans Movie
தமிழ் திரை உலகில் அறிமுகமான தொடக்கத்திலேயே மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க தொடங்கிய பிரசாந்த், 1990களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார் குறிப்பாக அவருடைய நடிப்பில் வெளியான "ஆணழகன்", "கல்லூரி வாசல்", "ஜீன்ஸ்", "கண்ணெதிரே தோன்றினாள்", "காதல் கவிதை", "ஜோடி" மற்றும் "ஹலோ" போன்ற திரைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக "கல்லூரி வாசல்" திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் வைத்திருந்த "போனி டெய்ல்" அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. ஆண்களும் நீளமாக தங்களுடைய முடிகளை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணமாக அப்போது இருந்தவர் பிரசாந்த் என்றால் அது மிகையல்ல. கடந்த 20003ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான "வின்னர்" என்கின்ற திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆனது. அதற்கு அந்த திரைப்படத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலு ஒரு முக்கிய காரணமாக மாறினார். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் பிரசாந்த் மிகப்பெரிய சரிவுகளை சந்திக்க தொடங்கினார்.
Andhagan
கடந்த 2005ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசாந்துக்கு, கிரகலட்சுமி என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான வெகு சில நாட்களிலேயே அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது பிரசாந்தின் குடும்பத்திற்கு தெரிய வந்தது. அதன்பிறகு அவருடைய குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் வெடித்த நிலையில், சுமார் 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2009ம் ஆண்டு கிரகலட்சுமியை, பிரசாந்த் விவாகரத்து செய்தார்.
இதனால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளான அவர், பெரிய அளவில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார், இன்னும் சொல்லப்போனால் 2006ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 6 ஆண்டுகள் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகும் கூட கடந்த 2019ம் ஆண்டு வரை வெகு சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தார். இந்த சூழலில் தான் சுமார் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு "அந்தகன்" என்கின்ற திரைப்படத்திலும் தளபதி விஜயின் "கோட்" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்து அசத்தியிருக்கிறார். மிகச் சிறந்த நடிகராக பிரசாந்த் இன்று வலம் வருவதற்கு காரணம் இளம் வயதில் அவர் கொடுத்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தான். அதிலும் குறிப்பாக பிரசாந்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் இளையராஜா.
Vanna Vanna Pookal Movie
தமிழ் திரையுலகில் 1990ம் ஆண்டு அறிமுகமான பிரசாந்த் நடிப்பில், கடந்த 1992ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "வண்ண வண்ண பூக்கள்". விமர்சன ரீதியாக பிரசாந்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாமல் பிரசாந்த் என்ற ஒரு நடிகர் இந்திய அளவில் பிரபலம் அடைய காரணம் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான்.
அதிலும் குறிப்பாக "கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி" என்கின்ற பாடல், பிரசாந்துக்கு மெகா ஹிட் பாடலாக மாறியது. இந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடியது இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவும் மிகப் பெரிய அளவில் பிரபலம். அந்த திரைப்படத்திற்கு பிறகு பல நல்ல திரைப்படங்களில் இளையராஜாவோடு இணைந்து பயணித்தார் நடிகர் பிரசாந்த்.
தியேட்டரில் 100 கோடி வசூல் அள்ளிய நானியின் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு