MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ப்ரோஸ்தெடிக் மேக்கப் முதல் DSS Tech வரை - இந்திய சினிமாவில் புரட்சி செய்த "ஆண்டவரின்" ஐந்து படங்கள்!

ப்ரோஸ்தெடிக் மேக்கப் முதல் DSS Tech வரை - இந்திய சினிமாவில் புரட்சி செய்த "ஆண்டவரின்" ஐந்து படங்கள்!

Ulaga Nayagan Kamal Haasan : உலகநாயகன் கமல்ஹாசன் என்றாலே நடிப்பு என்பதை தாண்டி, தனது திரைப்படங்களில் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான முயற்சிகளை கையாண்டவர் என்ற பெருமையும் அவரையே சேரும்

3 Min read
Author : Ansgar R
Published : Sep 21 2024, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mahanadhi

Mahanadhi

அந்த வகையில் இந்திய சினிமாவை பொறுத்தவரை உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்கள் மூலம் அறிமுகமான சில புதிய தொழில்நுட்பங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். அதன்படி 1994ம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "மகாநதி" திரைப்படத்தை சந்தனபாரதி இயக்கிய நிலையில், கமல்ஹாசன் மற்றும் ரங்கராஜன் ஆகிய இருவரின் எழுத்தில் உருவான படம் அது. இது மட்டுமல்லாமல் முதல் முறையாக இந்திய சினிமாவிலேயே "AVID" எனப்படும் சாப்ட்வேரை வைத்து படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட முதல் திரைப்படமாக இது மாறியது. 

41வது தேசிய விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு வழங்கும் இரு மாநில விருதுகளும் இந்த திரைப்படத்திற்கு கிடைத்தது. Forbes India நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில், இந்திய அளவில் 25 சிறந்த பெர்ஃபார்மன்ஸ் ஓரியண்டெட் திரைப்படங்களில் "மகாநதி" திரைப்படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டரில் 100 கோடி வசூல் அள்ளிய நானியின் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Devar Magan Movie

Devar Magan Movie

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கிய திரைப்படங்களில் ஒன்று தான், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான "குருதிப்புனல்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் பாடல்களே கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 

ஆனால் இந்திய சினிமா அளவில் முதல் முறையாக "டால்பி ஸ்டீரியோ சரவுண்டட்" (DSS) என்கின்ற புதிய ஒலி அமைப்பை பயன்படுத்தி, வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்திருப்பார் கமல்ஹாசன். அது மட்டுமல்ல, கடந்த 1992 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "தேவர் மகன்" என்கின்ற திரைப்படத்தில் தான், இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக திரைக்கதை எழுதுவதற்கு கணினி மூலம் மென்பொருள் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அப்படி ஒரு முயற்சியை எந்த திரைப்படத்திலும் யாருமே மேற்கொண்டதில்லை. 

34
Indian Movie

Indian Movie

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "இந்தியன் 2" திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய அளவில் எடுபடவில்லை. திரைக்கதை ரீதியாகவும் அந்த திரைப்படம் அழுத்தமாக இல்லை என்று மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்தது நாம் அறிந்ததே. இருப்பினும் 28 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1996 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சங்கரின் "இந்தியன்" திரைப்படம். மிகப் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே ஒரு சில திரைப்படங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் ப்ரோஸ்தெடிக் மேக்கப்பை சிறிய அளவில் பயன்படுத்தி இருக்கிறார் என்று போதும், இந்திய அளவில் முதல் முறையாக ஒரு படம் முழுக்க பயணிக்கும் ஒரு கதாபாத்திரம் ப்ரோஸ்தெடிக் மேக்கப்போடு வலம் வந்த முதல் திரைப்படம் இந்தியன் தான். அமெரிக்காவை சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டனர். இன்றளவும் இந்த தொழில்நுட்பத்தை வெகு சில இந்திய மொழி திரைப்படங்களில் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

44
Aalavandhan

Aalavandhan

பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் "ஆளவந்தான்". அப்போதே சுமார் 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலக அளவில் 30 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. இரட்டை வேடங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் அசத்திய ஒரு திரைப்படம் இது. 

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் கமல்ஹாசன் எழுதிய ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். மேலும் இந்திய அளவில் "மோஷன் கண்ட்ரோல் ரிங்" கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் திரைப்படமும் இது தான். கதாபாத்திரங்களின் அசைவுகளை கணினி மூலம் கணித்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல கேமராக்கள் தானாகவே நகர உதவுவது தான் "மோஷன் கண்ட்ரோல் ரிங்". இந்த தொழில்நுட்பத்தை இந்திய சினிமா அளவில் முதல் முதல் பயன்படுத்தியது உலகநாயகன் கமல்ஹாசன் தான்.

யுவன் சங்கர் ராஜா பிறந்த குஷியில்... இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved