கையில் காசில்ல; இளையராஜாவுக்கு சம்பளமாக மனைவியின் தாலியை கொடுத்த தயாரிப்பாளர்!
இசைஞானி இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்க கையில் பணம் இல்லாததால் தயாரிப்பாளர் ஒருவர் மனைவியின் தாலியை கொடுக்க வந்தாராம்.

இசையின் ராஜா இளையராஜா
அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தன்னுடைய இசையால் கடந்த 49 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. அவரின் இசைக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது. அவரது இசையில் உருவான பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இசைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் இளையராஜா என்பது நிதர்சனமான உண்மை. சின்ன படம், பெரிய படம் என்கிற பாகுபாடு இல்லாமல், எந்த படமாக இருந்தாலும் அதில் தன் நூறு சதவீத உழைப்பை கொடுப்பார் இளையராஜா.
சம்பளம் வாங்காத இளையராஜா
இளையராஜாவை பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதால், அவர் செய்த பல்வேறு நற்செயல்கள் வெளியில் தெரிவதில்லை. அந்த காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக இளையராஜா வலம் வந்தபோது அவர் பல்வேறு படங்களுக்கு சம்பளமே வாங்காமால் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பாளரின் வலிகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு இலவசமாக இசையமைத்துக் கொடுத்த படங்கள் ஏராளம். அதில் ஒரு படத்தை பற்றி சமீபத்திய பேட்டியில் அவரே கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 'என் இனிய பொன் நிலாவே' பாடல்; மகனால் இளையராஜாவுக்கு வந்த சிக்கல்? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இளையராஜாவுக்கு சம்பளமாக தாலியை தந்த தயாரிப்பாளர்
அதன்படி இளையராஜா ஒரு மலையாள படத்திற்கு இசையமைத்திருந்தாராம். அந்தப் படம் ரிலீஸ் ஆக இருந்த சமயத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் இளையராஜாவை வந்து சந்தித்திருக்கிறார். அவரிடம் என்னய்யா இந்த பக்கம் என இளையராஜா கேட்க, அதற்கு அந்த தயாரிப்பாளர், சார் என்னுடைய படம் ரிலீஸ் ஆகப்போகுது. என் படத்திற்கு இசையமைத்ததற்காக உங்களுக்கு சம்பளம் கொடுக்க என்னிடம் பணமில்லை. அதனால் இதை வச்சிக்கோங்க என ஒரு பொருளை கொடுத்தார்.
தயாரிப்பாளருக்கு செம டோஸ் கொடுத்த இளையராஜா
அது என்னவென்று திறந்து பார்த்ததும் இளையராஜா செம டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏனெனில் அந்த தயாரிப்பாளர் தன்னிடம் பணமில்லாததால் தன்னுடைய மனைவியின் தாலியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த இளையராஜா, முதல்ல அதை எடுத்துக்கிட்டு இங்கிருந்து கிளம்புயா என சொல்ல, அவர் இதை வச்சிக்கோங்க சார் என திரும்பி சொன்னதும் வெளிய போ என கராராக திட்டி அனுப்பிவிட்டாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் ராஜாவுக்கு என்ன ஒரு தங்கமான மனசு என பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... படம் பிளாப்; ஆனாலும் இளையராஜாவின் ஒத்த பாட்ட வச்சு ரூ.1 கோடி லாபம் பார்த்த தயாரிப்பாளர்