படம் பிளாப்; ஆனாலும் இளையராஜாவின் ஒத்த பாட்ட வச்சு ரூ.1 கோடி லாபம் பார்த்த தயாரிப்பாளர்
இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்று தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.
Ilaiyaraaja
இசை என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் இளையராஜா தான். அவரின் இசையையும் பாடல்களையும் பிடிக்காதவர் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆத்மார்த்தமான பாடல்களால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார். அன்னக்கிளியில் தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று விடுதலை வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
Isaignani Ilaiyaraaja
இளையராஜா தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில், அவர் இசையமைத்தாலே போதும் அந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு வாங்குவார்கள். அன்றைய சூழலில் பல இளம் இயக்குனர்களின் படங்களை காப்பாற்றியது இளையராஜாவின் பாடல்கள் தான். அப்படி இளையராஜாவின் ஒரே பாடல் மூலம் பல மடங்கு லாபம் ஈட்டி ஓஹோனு வாழ்ந்த தயாரிப்பாளர் பற்றி தற்போது பார்க்கலாம்.
avatharam
அப்படி இளையராஜாவின் பாடல்களால் மிகவும் பிரபலமடைந்த திரைப்படம் அவதாரம். இப்படத்தில் நாசர், ரேவதி ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். கடந்த 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை நாசர் தான் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார் நாசர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்ததால் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது.
இதையும் படியுங்கள்... 2 மணி நேரத்தில் இளையராஜா செய்த தரமான சம்பவம்; 6 பாட்டுமே சூப்பர் ஹிட்! எந்த படம் தெரியுமா?
Ilaiyaraaja Song Secret
இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு அந்த காலகட்டத்திலேயே ரூ.46 லட்சம் நஷ்டமாம். அப்போதைய சூழலில் இது மிகப்பெரும் தொகையாகும். படம் பிளாப் ஆனாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் செம சந்தோஷத்தில் இருந்தாராம். அதற்கு காரணம் இளையராஜாவின் ஒற்றை பாடல் தான். அவதாரம் படத்திற்காக இளையராஜா இசையமைத்தது மட்டுமின்றி தன் சொந்த குரலில் பாடி இருந்த ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
Thendral Vandhu Theendum Podhu song secret
அப்பாடலை முதலில் இளையராஜா போட்டுக் காட்டியபோது அது நாசருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். பின்னர் வேண்டா வெறுப்பாக ஓகே சொல்லி அப்பாடலை படத்தில் வைத்தாராம். நாசர் வேண்டா வெறுப்பாக வைத்த பாடல் தான் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அப்பாடலுக்காக மட்டுமே அப்படத்தின் ஆடியோ கேசட்டுகளை வாங்கியவர்கள் ஏராளம். அவதாரம் படத்தின் பாடல்கள் அடங்கிய 20 லட்சத்துக்கும் அதிகமான ஆடியோ கேசட்டுகள் விற்பனை ஆனதாம். அந்த கேசட் விற்பனை மூலம் மட்டும் அவதாரம் படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் தொகை மட்டும் ரூ.1.6 கோடியாம். இப்பாடல் மூலம் தான் படத்தில் நஷ்டம் அடைந்ததை விட ஒரு கோடி அதிகமாக லாபம் ஈட்டி விட்டாரம்.
இதையும் படியுங்கள்... கமல் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்; ஒலிம்பிக்கில் ஒலித்த கதை தெரியுமா?