- Home
- Cinema
- பாராட்டு விழாவில் 'அந்த' விஷயத்தை பேசாம விட்டுட்டாங்களே! இளையராஜா வருத்தம்! இசை பிரியர்கள் ஷாக்!
பாராட்டு விழாவில் 'அந்த' விஷயத்தை பேசாம விட்டுட்டாங்களே! இளையராஜா வருத்தம்! இசை பிரியர்கள் ஷாக்!
பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்பது குறித்து பேசாதது வருத்தம் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து இசையுலகில் என்றும் ராஜாவாக வலம் வரும் இசைஞானி இளையராஜா இசைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ள இளையராஜா, முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா
லண்டனில் சிம்பொனி சாதனை நிகழ்த்தி விட்டு தாயகம் திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இளையராஜா பெயரில் விருது
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டியதுடன், அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தனக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், ''தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.
இளையராஜா நன்றி
இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும்,அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்'' என்று கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் இளையராஜா வருத்தம்
மேலும் இளையராஜா அந்த வீடியோவில் ''பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்றும் எங்களுடைய திரையுலக 50 வருட வாழ்க்கை எப்படி இருந்தது என்றும் அதில் நடந்த சம்பவங்களை பற்றியும் சொல்லாதது எனக்கு ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் அது ஒரு விஷயமாக எனக்கு பட்டது. ஆனால் அவர்கள் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்'' என்றார்.