தேவா பத்தி என்கிட்ட கேட்காத; காப்புரிமை விவகாரத்தால் டென்ஷன் ஆன இளையராஜா!
இசைஞானி இளையராஜா சிம்பொனி இசையை வெளியிடுவதற்காக லண்டன் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Ilaiyaraaja Angry Reply in Copyrights Issue : இளையராஜா தன்னுடைய சிம்பொனி இசையை லண்டனில் வெளியிட உள்ள நிலையில், அதற்காக செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
சிம்பொனி இசை என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில், அதை 35 நாட்களில் உருவாக்கி இசை ஜாம்பவான்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் இளையராஜா. தன்னுடைய சிம்பொனி இசையை லண்டனில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் வெளியிட உள்ளார் இளையராஜா. மார்ச் 8-ந் தேதி சிம்பொனி வெளீயீட்டு விழா லண்டனில் நடைபெற உள்ள நிலையில், அதற்காக இன்று காலை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார் இளையராஜா.
Ilaiyaraaja
சிம்பொனி இசையை வெளியிட உள்ள இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று காலை லாண்டன் கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தன்னை இன்கிரெடிபிள் இளையாராஜா என பெருமையாக கூறிக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... லண்டனில் அரங்கேற்றப்படும் இளையராஜாவின் முதல் சிம்பொனிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து – வைரலாகும் வீடியோ!
Ilaiyaraaja Interview
மேலும் அவர் பேசியதாவது : உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவினர் வாசித்துள்ள சிம்பொனியை லண்டனில் வெளியிட உள்ளேன். இந்த நேரத்தில் தமிழனாக உணர்கிறேன் என்பதை விட ஒரு மனிதனாக உணர்கிறேன். இது என்னுடைய பெருமையல்ல நம் நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. இன்கிரெடிபிள் இந்தியா மாதிரி நான் இன்கிரெடிபிள் இளையராஜா. இதுக்குமே மேல் யாரும் வரப்போவதும் இல்லை; இதற்கு முன் வந்ததும் இல்லை. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான் என பேசினார்.
Ilaiyaraaja Says about Deva
தொடர்ந்து காப்புரிமை விவகாரத்தில் தான் யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்று தேவா கூறியதை சுட்டிக்காட்டி இளையராஜாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனால் டென்ஷன் ஆன இளையராஜா, இப்போ இந்த கேள்வி தேவையா? இது அனாவசியமானது. இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். இங்க நான் பேசணுமா... இல்லை நீங்க பேசணுமானு முடிவு பண்ணிக்கோங்க என கராராக பேசியதால் அங்கு சில நிமிடம் கப்சிப் என ஆனது.
இதையும் படியுங்கள்... கதையே கேட்காம இசையமைத்த இளையராஜா; பாடல்கள் அனைத்தும் செம ஹிட்! என்ன படம் தெரியுமா?