- Home
- Cinema
- லண்டனில் அரங்கேற்றப்படும் இளையராஜாவின் முதல் சிம்பொனிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து – வைரலாகும் வீடியோ!
லண்டனில் அரங்கேற்றப்படும் இளையராஜாவின் முதல் சிம்பொனிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து – வைரலாகும் வீடியோ!
Sivakarthikeyan Wish Ilaiyaraaja For His First Symphony Concert : இசைஞானி இளையராஜா லண்டனில் முதல் சிம்பொனி இயற்ற இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan Wish Ilaiyaraaja For His First Symphony Concert : கோடிக்கணக்கான இதங்களை தனது இசையால் கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது பாடல்கள் இல்லாத இடங்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடங்களிலும் அவரது பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி இருக்கிறார். 10000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.
Ilaiyaraaja First Symphony
அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்று விடுதலை 2 வரையில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் வந்த பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தான் வரும் 8ஆம் தேதி லண்டனில் முதல் சிம்பொனியை அரங்கேற்றுகிறார். இதன் காரணமாக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் நேரில் சென்று அவரிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sivakarthikeyan Wish Ilaiyaraaja
35 நாட்களில் உருவாக்கப்பட்ட சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றுகிறார். அது ஆசியாவிலேயே யாரும் செய்யாத ஒரு சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரித்துள்ளார்.
Ilaiyaraaja First Symphony Concert at London
யாழ் ஒன்றை நினைவுப்பரிசாகவும் வழங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். வட இந்தியா மக்கள் தமிழர்களை அழைக்கும் ஒரு கதையை மையப்படுத்தி மதராஸீ படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பராசக்தி ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.