- Home
- Cinema
- இதுமட்டும் நடந்தால் ஜனநாயகன் நாளைக்கே ரிலீஸ்தான்.. உடைத்து பேசிய சென்சார் போர்டு மெம்பர்..!
இதுமட்டும் நடந்தால் ஜனநாயகன் நாளைக்கே ரிலீஸ்தான்.. உடைத்து பேசிய சென்சார் போர்டு மெம்பர்..!
படத்தில் பாதுகாப்புப் படை சின்னங்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களை சென்சார்போர்டு மேல்முறையீட்டில் கூறியுள்ளது. வழக்கின் இறுதி முடிவு வரும் வரை சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது.

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பான சென்சார்ஃபோர்டு மேல்முறையீடுக்கு செல்வதாக கூறி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு U/A 16+ தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய முடிவு செல்லாது எனக் கூறினார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்சார்ஃபோர்டு சார்பில் உடனடியாக மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் அவசர விசாரணை கோரினார்.
தலைமை நீதிபதி அமர்வு, மேல்முறையீட்டை பரிசீலிக்க ஒப்புக்கொண்டது. அப்போது நீதிபதிகள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார்போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால், படத்தின் வெளியீடு முதலில் ஜனவரி 9 திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சென்சார்போர்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இதனால் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் பாதுகாப்புப் படை சின்னங்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களை சென்சார்போர்டு மேல்முறையீட்டில் கூறியுள்ளது. வழக்கின் இறுதி முடிவு வரும் வரை சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது. இந்நிலையில் விஜயும், படக்குழுவும் சில விஷயங்களை ஒப்புக்கொண்டால் நாளையே படத்தை ரிலீஸ் செய்யலாம் என சென்சார்போர்டு உறுப்பினர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘‘ஜனநாயகன் திரைப்படத்தில் அதிக வயலன்ஸ் காட்சிகள் இருக்கிறது. யு/ஏ 16 ப்ளஸ் என்கிற கேட்டகிரி இருக்கிறது. அந்த சர்டிபிகேட் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ஜனநாயகன் படக்குழு யு/ஏ சர்டிபிகேட் கேட்டதால் அது முடியாது என சென்சார்போர்டு மறுத்து விட்டது. 16 வயதுக்கு கீழ் உள்ள யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தால் மட்டுமே 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் தியேட்டரில் படம் பார்க்க முடியும், கலெக்சனும் அதிகமாகும். ஆகையால் இந்த வகையான சர்டிபிகேட்டை ஜனநாயகன் படக்குழு கேட்டு வருகிறது. ஆகையால் சென்சார்போர்டு மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. அண்டர் யு/ஏ சான்றிதழுக்கு படக்குழு சம்மதித்தால் நாளைகே ஜனநாயகன் படம் வெளியாகலாம்’’ என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
