- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. அதிர்ச்சியில் குடிமகன்கள்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.. அதிர்ச்சியில் குடிமகன்கள்
தமிழக அரசின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் கடைகள், பண்டிகை நாட்களில் கூட இயங்கும். இந்நிலையில், ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள்
தமிழகம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனை தமிழக அரசே எடுத்து நடத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களில் இதன் வருமானம் இரட்டிப்பாகும். அதாவது ரூ.120 முதல் ரூ.150 கோடி மது விற்பனையாகும். குறிப்பாக பண்டிகை நாட்களான புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற தினத்தில் தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை செய்யப்படும்.
தீபாவளி பண்டிகை
வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் விளங்குகிறது. அரசு இயந்திரமே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை வைத்து தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ.790 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதுவும் தலைநகர் சென்னையை விட மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையானது.
8 நாட்கள் மட்டுமே விடுமுறை
மேலும் மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாமல் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. அதாவது 12 மாதங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை அளிக்கிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இந்நிலையில் ஜனவரி மாதத்தில் டாஸ்டாக் கடைகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம். ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 26ம் தேதி திங்கள்கிழமை குடியரசு தின விழா ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

