- Home
- Cinema
- இட்லி கடை முதல் லோகா வரை... இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்களின் முழு லிஸ்ட் இதோ
இட்லி கடை முதல் லோகா வரை... இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்களின் முழு லிஸ்ட் இதோ
இந்த வாரம் முன்னணி ஓடிடி தளங்களில் 12 புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாக உள்ளன. ஆக்ஷன், ஹாரர், டிராமா, ஃபேண்டஸி எனப் பல்வேறு ஜானர்களில் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் காத்திருக்கிறது.

This Week OTT Release Movies and Web Series
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரசிகர்களுக்கு உண்மையான பொழுதுபோக்கு விருந்து காத்திருக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார், லயன்ஸ்கேட் ப்ளே போன்ற ஓடிடி தளங்கள் ஆக்ஷன், ஹாரர், டிராமா, ஃபேண்டஸி போன்ற பல்வேறு ஜானர்களில் 12 புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை இந்த வாரம் களமிறக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி வெளியீடுகள்
இட்லி கடை
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்கி உள்ளதோடு, இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தந்தையின் பாரம்பரியமான இட்லிக் கடையைக் காப்பாற்றும் இளைஞனின் கதை தான் இந்த இட்லி கடை. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், சமுத்திரக்கனி, சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
தி விட்சர் சீசன் 4
ஹென்றி கேவிலுக்குப் பதிலாக லியாம் ஹெம்ஸ்வொர்த், ரிவியாவின் ஜெரால்ட்டாக நடிக்கும் இந்த சீசன், “பாப்டிஸம் ஆஃப் ஃபயர்” நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஜெரால்ட், சிரி, யென்னிஃபர் இடையேயான மோதல், மந்திர சக்திகள் மற்றும் அரசியல் இந்த சீசனின் முக்கிய அம்சமாகும். இந்த வெப் தொடர் அக்டோபர் 30ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
பேலட் ஆஃப் எ ஸ்மால் பிளேயர்
கொலின் ஃபாரெல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மக்காவ் கேசினோக்களில் நடக்கும் ஒரு சூதாட்ட த்ரில்லர். ஒரு ஐரிஷ் மோசடிக்காரனின் வாழ்க்கையில் நடக்கும் மன மற்றும் ஆன்மீகப் போராட்டமே இதன் கதைக்களம். இதுவும் அக்டோபர் 29ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
அமேசான் பிரைம் வீடியோவில் என்ன ஸ்பெஷல்?
பாகி 4
டைகர் ஷெராஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லரில், ரோனி என்ற கமாண்டோ தனது காதலி அலிஷாவுக்காக நடத்தும் உயிரைப் பணயம் வைக்கும் போராட்டமே கதை. சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இப்படம் அக்டோபர் 31ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஹெட்டா
டெஸ்ஸா தாம்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இது, ஹென்ரிக் இப்சன் எழுதிய ‘ஹெட்டா கேப்ளர்’ நாடகத்தின் நவீன வடிவம். 1950களின் இங்கிலாந்தில் ஒரு இளம் பெண்ணின் சுயபரிசோதனைக் கதை இது. அக்டோபர் 29ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் இது ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி ஹோம்
பீட் டேவிட்சன் நடித்துள்ள இந்த சைக்கலாஜிக்கல் ஹாரர் படத்தில், ஒரு இளைஞன் ஓய்வூதிய இல்லத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறான். அங்கு மறைந்திருக்கும் ஒரு வழிபாட்டுக் குழுவின் ரகசியங்கள் கதையின் முக்கிய அம்சம். இப்படத்தை அக்டோபர் 31ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
ஜீ5 ஓடிடியில் என்னென்ன ரிலீஸ்?
பாய் துஜ்யாபாய்
மராத்தி தொடராக உருவாகியுள்ள இந்தக் கதை, 1990களின் பின்னணியில் அஹில்யா என்ற இளம் பெண் கல்விக்காக நடத்திய போராட்டத்தைக் காட்டுகிறது. பெண்களின் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் அக்டோபர் 31ந் தேதி முதல் ஜீ5-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.
மாரிகள்ளு
கன்னட புராணக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மர்மத் தொடரில், புதையலைத் தேடிச் சென்ற நண்பர்கள் குழு தெய்வீக சாபத்திற்கு ஆளாகிறது. திகில் மற்றும் ஆன்மீகக் கூறுகள் இதில் கலந்துள்ளன. இந்த வெப் சீரிஸ் வருகிற அக்டோபர் 31ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த வார வெளியீடுகள்
லோகா சாப்டர் 1: சந்திரா
சூப்பர் ஹீரோ மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கலவையில் உருவான இந்தப் படம், இது “லோகா சினிமாடிக் யுனிவர்ஸ்”-க்கு ஒரு தொடக்கமாகும். யக்ஷினி சந்திரா கதாபாத்திரத்தைச் சுற்றி மர்மம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் நகரும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்திருந்தார். டொமினிக் அருண் இயக்கிய இந்த படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 31ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது.
IT: வெல்கம் டு டெர்ரி
பிரபல ஹாரர் படமான “IT” இன் ப்ரீக்வல் இது. 1962ல் டெர்ரி நகரில் பென்னிவைஸின் பயங்கரமான வேர்கள் மற்றும் அந்த நகரத்தின் சமூக அச்சங்களே இதன் கதைக்களம். இப்படம் அக்டோபர் 27ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
மேகன் 2.0
ரோபோடிக் த்ரில்லர் “மேகன்” படத்தின் தொடர்ச்சி தான் இது. புதிய ஹியூமனாய்டு ஆயுதமான AMELIA உடன் மேகனின் போராட்டம், தொழில்நுட்ப ஹாரர் ரசிகர்களைக் கவரும். இப்படம் அக்டோபர் 27ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.