MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆத்தாடி? ஒரே நாளில் கோடீஸ்வரரான ஷாரிக்; இரண்டாவது கணவராக மாற இத்தனை கோடி வரதச்சணையா!

ஆத்தாடி? ஒரே நாளில் கோடீஸ்வரரான ஷாரிக்; இரண்டாவது கணவராக மாற இத்தனை கோடி வரதச்சணையா!

பிரபல நட்சத்திர ஜோடியான உமா - ரியாஸ் கான் ஜோடியின் மகன், ஷாரிக் ஹாசன் திருமணத்திற்காக கொடுக்கப்பட்ட வரதட்சணை குறித்த தகவல், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

3 Min read
manimegalai a
Published : Nov 04 2024, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shariq and Maria Wedding

Shariq and Maria Wedding

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்த பிரபலமானவர் ரியாஸ் கான். இவர் மூத்த நடிகை கமலா காமேஷின் மகள், உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் கான் மற்றும் சமரத் ஹாசன் கான் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

தன்னுடைய பெற்றோரைப் போலவே, நடிப்பில் ஆர்வம் காட்டிய ஷாரிக், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த 'பென்சில்' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து பாடி பில்டிங்கில் ஆர்வம் காட்டிய ஷாரிக் ஹாசன், 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ஜிகிரி தோஸ்த், நேற்று இந்த நேரம் , போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஷாரிக் தற்போது 'ரெசார்ட்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

25
Riyaz Khan and Uma Riyaz Son

Riyaz Khan and Uma Riyaz Son

திரையுலகில் நிலையான இடத்தை போராடி வரும் ஷாரிகை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது, 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாரிக், 49 வது நாளில் நிகழ்ச்சிகள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, அனிதா சம்பத்துடன் இவர் செய்த டான்ஸ் பர்பாமமென்ஸ் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. மேலும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார்.

தற்போது நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் ஷாரிக், கடந்த ஆகஸ்ட் மாதம் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாரிக்கை விட 3 வயது மூத்தவரான மரியா, ஏற்கனவே திருமணம் ஆகி, இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ஷாரிக் - மரியா திருமணம்,  சென்னை அடையாளில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது .இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

கடவுள் தந்த தீபாவளி பரிசு; மகிழ்ச்சியில் "தாத்தா எம்.எஸ் பாஸ்கர்" - வெளியான லவ்லி கிளிக்ஸ்!

35
Shariq Hassan Christian Wedding

Shariq Hassan Christian Wedding

ஷாரிக் மற்றும் மரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், மரியாவின் பின்னணி குறித்து தொடர்ந்து ரசிகர்கள் பலர் தேடி வந்தனர்.  கடந்த மாதம் முதல் முறையாக இருவரும் இணைந்து கொடுத்த பேட்டி சமூக வலைதளத்தில் படு வைரல் ஆனது. இதில் மரியா ஏற்கனவே தனக்கு திருமணம் ஆன தகவலை மரியா கூறியது மட்டுமின்றி, தனக்கு எட்டு வயதில் மகள் இருப்பதையும் தெரிவித்தார். ஷாரிக்கை தனக்கு பிடித்த காரணம், அவர் தன்னுடைய மகள் மீது அவர் காட்டிய பாசம் தான் என கூறினார்.

தன்னுடைய மகளை வளர்ப்பதற்காக சிங்கிள் மதராக இருந்து கஷ்டப்பட்டு வந்ததாகவும், மகளுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்வது பற்றி தான் யோசிக்கவே இல்லை என்பதையும் மரியா அந்த பேட்டியில் கூறி இருந்தார். காரணம் என்னை திருமணம் செய்து கொள்பவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள், என்னுடைய மகளை ஏற்றுக் கொள்வார்களா என்கிற பயம் இருந்தது. ஆனால் ஷாரிக் குடும்பத்தில் தன்னுடைய மகளை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். ஷாரிக் சிறந்த கணவர் என்பதை தாண்டி, சிறந்த தந்தையாக இருப்பதாக தெரிவித்தார்.

45
Shariq wedding Photos

Shariq wedding Photos

அதேபோல் ஷாரிக்கின் பெற்றோரும் ஜாராவை தங்களின் சொந்த பேத்தியாக பார்க்கின்றனர். ஷாப்பிங் போனால் கூட... மூன்று பேருமே ஒன்றாக தான் செல்கிறார்கள். அது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார். இது ஒருபுறம் இருக்க, மரியா ஜெனிஃபர் குறித்தும், ஷாரிக்கிற்க்கு கொடுக்கப்பட்ட வாரதச்சணை குறித்தும்,  புதிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவயதில் இருந்தே சென்னையில் பிறந்து வளர்ந்த மரியா, வீட்டின் செல்ல மகள். மரியாவின் அப்பா மிகப்பெரிய பிஸ்னஸ் மேல். இவருக்கு சுமார் 150 முதல் 200 கோடி வரை சொத்துக்கள் கொட்டி கிடக்கிறதாம்.  இளம் வயதிலேயே மகள் மரியாவை பணக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், குழந்தை பிறந்த பின்னர் இருவரும் பிரிந்துள்ளனர். மரியா தான் குழந்தையை சிங்கிள் மதராக இருந்து வளர்த்துள்ளார். பலமுறை இரண்டாவது திருமணம் குறித்து, இவருடைய வீட்டில் பேச்சை எடுத்த போதும் அவர் தொடர்ந்து மறுத்துள்ளார்.\எதிர்பாராத எலிமினேஷன்; கண்ணீரோடு பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்கு குட்பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!

55
Shariq And Maria Wedding Dowry

Shariq And Maria Wedding Dowry

ஷாரிக் மீது ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்ட மரியா, தற்போது இருவீட்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மகளை திருமணம் செய்து கொண்டுள்ள ஷாரிக்கிற்க்கு, சென்னையில் சுமார் 25 கோடி மதிப்புள்ள பங்களாவை வரதச்சணையாக கொடுத்துளார்களாம் மரியாவின் பெற்றோர். அதே போல் கிலோ கணக்கில், நகை மற்றும் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி கோடி கணக்கில் வரதச்சணை கொடுத்தது பற்றி ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வலம் வந்தாலும், ஏராளமான ரசிகர்கள் மற்றும் நெட்டிசனால் ஷாரிக்கிற்க்கு ஆதாரமாக, மரியாவை முழு மனதோடு காதலித்து தான் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது வரதச்சணை எவ்வளவு கொடுத்திருந்தாலும், அது பெற்றோர் அவரின் பெண்ணுக்கு கொடுத்தது. ஷாரிக் உண்மையான காதலோடு தான் திருமணம் செய்து கொண்டார் என கூறி வருகிறார்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved