ரஜினி உடல் நிலை எப்படியிருக்கிறது?... சற்று முன்பு அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு...!
First Published Dec 25, 2020, 7:35 PM IST
இன்று காலை திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சிகிச்சையில் அவருக்கு முடிவு நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?