13 வயதிலயே செயின் ஸ்மோக்கர்.. ஒருநாளைக்கு 170 சிகரெட் பிடித்த வெற்றிமாறன் அதிலிருந்து மீண்டுவந்த கதை தெரியுமா?
Vetrimaaran : ஒரு நாளைக்கு 170 சிகரெட் வரை ஊதித்தள்ளும் அளவுக்கு செயின் ஸ்மோக்கராக இருந்த வெற்றிமாறன் அதிலிருந்து மீண்ட கதையைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் தோல்விப் படங்களே கொடுத்திராத இயக்குனர்கள் ஒருசிலரே, அவர்களில் முதன்மை ஆனவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றிமாறன், தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆனபோதிலும் இதுவரை 5 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். இந்த 5 படங்களும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தரமான படங்கள் ஆகும். இவர் இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக உள்ள வெற்றிமாறன் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு 170 சிகரெட் வரை ஊதித்தள்ளும் அளவுக்கு செயின் ஸ்மோக்கராக இருந்த அவர் அதிலிருந்து மீண்ட கதையைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
13 வயசுலயே ஒரு செயின் ஸ்மோக்கர். ஸ்கூல், காலேஜ்னு ஆரம்பிச்சு சினிமா இண்டஸ்ட்ரி வரைக்கும் வெற்றிமாறன் என்று சொன்னாலே கையில் ஒரு சிகரெட் வைத்திருப்பவர் என்பது தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். 21 வயசுக்கு முன்னாடியே புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் உடல் உறுப்புகளின் வளர்ச்சி கம்மியாகி விடுமாம். பொல்லாதவன் படத்தை எடுத்த சமயத்தில் ஒரு நாளைக்கு 170 சிகரெட் வரை ஊதித்தள்ளுவாராம் வெற்றி.
இதையும் படியுங்கள்... தலைக்கேறிய ஓவர் போதையில்... நான்கு பேருடன் ஒரே சோபாவில் கட்டி உருளும் த்ரிஷா! வைரலாகும் வீடியோ..!
ஒருகட்டத்தில் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவரை அணுகியுள்ளார் வெற்றிமாறன். அப்போது ஆஞ்சியோ பண்ணினாலும், சிகரெட் பழக்கத்தை கைவிடாவிட்டால் நிலமை ரொம்ப மோசமாகிடும்னு மருத்துவர்கள் சொல்லிருக்காங்க. அப்போதுகூட என்ன பண்ணலாம்னு சிகரெட் பிடித்தபடி யோசித்து கொண்டிருந்தாராம் வெற்றி.
பின்னர் உடல்நலன் கருதி ஒருமாதம் சிகரெட் பிடிக்காமல் இருந்து வந்துள்ள வெற்றிமாறன், ஒருநாள் ஷூட்டிங்கின் போது டென்ஷன் ஆகி தனது உதவியாளரிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்லி ஒரு மாதத்திற்கு அடிக்கமுடியாமல் போன சிகரெட்டை ஒரே நாளில் ஊதித்தள்ளினாராம். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பல முறை சிகரெட் பழக்கத்தை கைவிட முயற்சித்தும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காதது ஏன்? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சரண்யா பொன்வண்ணன்
இப்படி பல முறை முயன்றும் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியாத வெற்றிமாறன். ஒரே நாளில் சிகரெட் பழக்கத்தை கைவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் நிஜம். கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யா போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.
அந்தபடத்தை பார்த்து முடித்து தியேட்டரை விட்டு வெளியே வந்த வெற்றிமாறன், இது தான் நான் குடிக்கும் கடைசி சிகரெட் என சொல்லி ஒரு சிகரெட்டை ஊதித்தள்ளினாராம். அன்றிலிருந்து இன்றுவரை அவர் சிகரெட்டையே தொடவில்லையாம். அவரின் சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு வாரணம் ஆயிரம் படம் பெரிதும் உதவியுள்ளது. திரைப்படம் மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலாத்கார மிரட்டல்களை சந்தித்தேன்..பரபரப்பை கிளப்பிய பிரபலம்