விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காதது ஏன்? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த சரண்யா பொன்வண்ணன்
saranya Ponvannan : தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா தான் என சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்ட சரண்யா பொன்வண்ணன், இதுவரை விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடித்ததே இல்லை.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ரிலீசான நாயகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். முதல் படத்திலேயே கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆனார் சரண்யா.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் கருத்தம்மா, பசும்பொன் ஆகிய படங்களில் நடித்தபோது, அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பொன்வண்ணன் இவர் மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சரண்யா, 2000-ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... மங்காத்தா ரிலீசாகி 11 ஆண்டுகள் ஆச்சு..! அன்சீன் போட்டோஸை வெளியிட்டு அஜித் ரசிகர்களை குஷியாக்கிய வெங்கட் பிரபு
அவர் தனது இரண்டாவது இன்னிங்சில் அம்மா வேடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுந்தந்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா தான் என சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டார்.
ஆனால் இவர் இதுவரை நடிகர் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடித்ததே இல்லை. அவருடன் குருவி படத்தில் மட்டும் சரண்யா நடித்திருந்தாலும், அதிலும் அவருக்கு அம்மாவாக நடிக்கவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரண்யா, அது ஏன் என்றே தெரியவில்லை. அதற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை என்பது தான் உண்மை. விஜய்யும் என்னை எங்காவது பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போதெல்லாம், நாம் கண்டிப்பாக சேர்ந்து படம் பண்ணுவோம் என கூறிவார். கண்டிப்பாக விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்” என சரண்யா உறுதிபட கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற..! அம்மா பாடல் மூலம் நிஜ வாழ்விலும் யுவனுக்கு நடந்த மேஜிக்