Holy Wound : பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகும் லெஸ்பியன் டிராமா "ஹோலி வுண்ட்" !
ஒன்றாக பள்ளியில் படிக்கும் போது நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவர், ஏவூட்டு லெஸ்பியனாக மாறுகிறார்கள் என்பதை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மலையாள திரைப்படம் ஹோலி வுண்ட். தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் கிளம்பினாலும், சிலர் வரவேற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இடையிலான உறவை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ஜானகி சுதீர், அம்ரிதா வினோத் மற்றும் சாபு பிரவுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உருவாகியுள்ள எரோடிக் டிராமா திரைப்படம் ஹோலி வுண்ட்.
மேலும் செய்திகள்: கணவர் இறந்த பின் வீட்டுக்குள் முடங்கிய மீனா... வெளியே அழைத்து வந்த இரு பிரபலங்கள்! வைரலாகும் பீச் போட்டோஸ்!
அசோக் R நாத் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பால் விக்லிஃப் எழுதியுள்ளார். ஹோலி வுண்ட் பெண் ஓரினச்சேர்க்கை உறவை (லெஸ்பியன்) பற்றிய டிராமா திரைப்படமாகும்.
சிறு வயதில் அன்பாக வளர்ந்த இரண்டு சிறுமிகள், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்து, உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றாக வாழ்க்கையில் இணைகிறார்கள். இதனால் அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சனை என்ன? என்பதை இதுவரை எடுத்திராத கோணத்தில் மலையாளத்தில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.
மேலும் செய்திகள்: கட்டப்பாவாக மாறிய காஜல்... பாகுபலியாக மாறி அவரது குட்டி மகன்... ராஜமௌலிக்கு டெடிகேட் செய்த வேற லெவல் போட்டோ..!
இப்படத்திற்கு ரோனி ரஃபேலின் இசையமைக்க, உன்னி மடவூரின் ஒளிப்பதிவு செய்துள்ளார். விபின் மன்னூர் படத்தொகுப்பு செய்துள்ளார். Sahasrara Cinema Pvt Ltd வழங்க, R சந்தீப் தயாரித்துள்ளார்.
holy இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போதே படத்தை வெளியிட கூடாது என, பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12, ஆம் தேதி முதல் SS Frames ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகும் பல்வேறு சர்ச்சைகள் எழும் என எதிர்பார்க்கபடுகிறது.