ஒரு வாரத்துக்கே லட்சத்தில் சம்பளம்! ஹிந்தி பிக்பாசிலிருந்து வெளியேறிய ஸ்ருத்திகா சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள, ஸ்ருத்திகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.
Shruthika Salary
தமிழ் சினிமாவில் தன்னுடைய 15 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ படத்தில் அறிமுகமான ஸ்ருத்திகா, இதை தொடர்ந்து ஆல்பா போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், சினிமா கனவுக்கு குட் பைசொல்லிவிட்டு, தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். இதன் பின்னர், அர்ஜுன் என்பவரை ஃபேஸ் புக் மூலம் காதலிக்க துவங்கிய ஸ்ருத்திகா அவரையே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது 13 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.
Bigg Boss Hindi 18 contestant Shruthika
சினிமாவில் இருந்து ஒரேயடியாக விலகிய ஸ்ருத்திகா, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனிக்க வைத்தார். பெரிதாக எந்த ஒரு சமையலும் தெரியாமல், இந்த நிகழ்ச்சிகள் ஸ்ருத்திகா கலந்து கொண்டாலும் பின்னர் எப்படியும் டைட்டிலை வெல்ல வேண்டும் என கடுமையாக உழைத்து, விதவிதமாக சமையல் செய்து அசத்தி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறினார்.
Vijay tv Cook With Comali
பொதுவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளிகளாக இருப்பவர்களின் சேட்டை ரசிக்கும் விதமாக இருப்பதால் அதிக ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் ஸ்ருத்திகாவின் சேட்டை கோமாளிகளையே பீட் செய்யும் விதத்தில் இருந்ததால், இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமும் உருவானது. அனைவருடனும் அன்பாக பழகும் குணம் கொண்ட இவர், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பரிசு தொகை முழுவதையும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ரேஸ் கார் பலத்த சேதமடைந்தும் ஒரு காயம் கூட இல்லாமல் அவர் தப்பியது எப்படி?
Salaman Khan Hosting Bigg Boss 18
அடுத்தடுத்து சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்த ஸ்ருத்திகா, யாரும் எதிர்பாராத விதமாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் ஹிந்தி சீசன் 18 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஸ்ருத்திகாவை ஆரம்பத்தில் ஹிந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், பின்னர் தன்னுடைய வெகுளித்தனமான சிரிப்பு மற்றும் பேச்சால் அனைவரது மனதையும் கவர்ந்தார்.
Mid Week Elimination
இந்நிலையில் இவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த சிலரே, டார்கெட் செய்து, ஸ்ருத்திகா மிட் வீக் எவிக்ஷன் மூலம், எலிமினேட் செய்து வெளியேற்றியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்ருத்திகா வெளியேற்றப்பட்டது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. ஸ்ருத்திகாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பிக்பாஸ் ஹிந்தி ரசிகர்கள் ஒருபுறம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும், ஸ்ருத்திகா எதையும் பற்றி கவலை இல்லாமல் வெளியே வந்து தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 மிட் வீட் எவிக்ஷனில் வெளியேற போவது இந்த இருவரில் ஒருவரா?
Shruthika Whooping Salary:
மேலும் வெளியே வந்த கையேடு, தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் ஸ்ருதிகா பிக்பாஸ் ஹிந்தி சீசன் 18 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் ஒரு வாரத்திற்கு ரூ.1 லட்சம் சம்பளமாக பெற்ற நிலையில், சுமார் 13 வாரங்கள் உள்ளே இருந்த நிலையில், ரூ.13 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.