பிக்பாஸ் தமிழ் சீசன் 8 மிட் வீட் எவிக்ஷனில் வெளியேற போவது இந்த இருவரில் ஒருவரா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற உள்ள மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற உள்ள போட்டியாளர், இந்த இருவரில் ஒருவர் தான் என கூறப்படுகிறது.
Vijay Sethupathi hosting bigg boss
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, முந்தைய சீசனை விட அமைதியாகவும்... அனைத்து தரப்பு ரசிகர்களால் ரசிக்கும் படியும் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இறுதி கட்டத்தை நெருங்கும் போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிகமானோர் பார்க்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் உள்ளே 18 போட்டியாளர்கள் அதிரடியாக என்ட்ரி கொடுத்த நிலையில், ரவீந்தர், தர்ஷா குப்தா, போன்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட பின் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை ஒரே நேரத்தில் களமிறங்கினார் பிக்பாஸ். இவர்களில் தற்போது ரயான் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளார். மற்ற வைல்டு கார்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
TTF Winner is Rayan
மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டில், 24-ஆவது போட்டியாளராக உள்ளே வந்த ரயான் TTF வென்று முதல் பைனல் லிஸ்ட்டாக தேர்வாகி, பைனலுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய 8 போட்டியாளர்களை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே அனுப்பி இருக்கிறார் பிக் பாஸ். இந்த 8 போட்டியாளர்களில் இருவர் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு பதிலாக ரிப்ளேஸ் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்படும் ரகசியம்? ஒரே வரியில் 'வணங்கான்' பட கதையை ரிவீல் செய்த இயக்குனர் பாலா!
Bigg Boss Knockout
இதற்காக போட்டிகள் நடத்தப்பட்டு ரீபிளேஸ்மென்ட் நடக்கும் என தெரிகிறது. அந்த இரண்டு இடங்களை பிடிக்க வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், முதல் நாளில் இருந்து கஷ்டப்பட்டு இதுவரை வந்துள்ள போட்டியாளர்கள், தங்களுக்கான இடத்தை விடக்கூடாது என தீவிரமாக உள்ளனர்.
எலிமினேட் ஆகி வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்துள்ள போட்டியாளர்கள், பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்சாக உள்ள போட்டியாளர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே விஷால் குறித்து சச்சனா நீ பிளேபாய் போல், இரண்டு பெண் போட்டியாளர்களை காதலித்து வெளியே அனுப்பி விட்டாய் என கூறியது அவருடைய மனதை அதிகம் பாதித்த நிலையில், கண்ணீர் விட்டு அழுதார்.
Arnav Criticised Jefri and Sathya
அதேபோல் அர்னவ், ஜெப்ரி மற்றும் சத்யா குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதற்கு சக போட்டியாளர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக பெண் போட்டியாளர்கள் அர்னவ்வை ரோஸ்ட் செய்தது செம்ம ஹைலைட்டாக இருந்தது. இன்றைய தினம் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவை டார்கெட் செய்து, சில பெண் போட்டியாளர்கள் முன்வைத்த கருத்தால் சௌந்தர்யா கண்ணீர் விட்டு அழுத ப்ரோமோ வெளியானது.
Bigg Boss Tamil 8 Mid Week Eviction
மேலும் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் உறுதியாகியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் யார் இந்த வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த வாரம் மிட் வீக் எவிஷனை நடத்த உள்ளது, உள்ளே வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்துள்ள 8 போட்டியாளர்கள் தான் என்பதால், அவர்கள் விருப்பு - வெறுப்பை தாண்டி, பொதுவான கருத்துடன் ஒருவரை தேர்வு செய்வார்கள் என கூறப்படுகிறது. பிளே பாய் லிஸ்டில் இணைக்கப்பட்டுள்ள விஷால் மற்றும் நட்பைசார்ந்து விளையாடி கொண்டிருக்கும் ஜாக்குலின் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.