1 படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம்; இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் இவர் தான்!
கேஜிஎஃப் புகழ் யாஷ், ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் லாபத்தில் பங்கு பெறும் அவர், ரூ.200 கோடி வரை சம்பளமாகப் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Highest Paid Villain in India
ஒரு படத்திற்கு எந்தளவு ஹீரோ கேரக்டர் முக்கியமோ அதே அளவு வில்லன் கேரக்டரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் படத்தில் ஹீரோவின் கேரக்டரை வலிமையாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டர் அவரியம். முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் அவர்கள் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது பல ஹீரோக்கள் நெகட்டிவ் ரோலில் அல்லது வில்லன் ரோலில் எந்த தயக்குமும் இல்லாமல் நடிக்கின்றனர்.
Highest Paid Villain in India
கமல்ஹாசன், சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சயிஃப் அலிகான், பாபி தியோல் உள்ளிட்ட ஹீரோக்கள் தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து வருகின்றனர். குறிப்பாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பெரிய ஹீரோக்கள் தான் வில்லன் ரோலில் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் யார் தெரியுமா?
Highest Paid Villain in India
அவர் வேறு யாருமில்லை கேஜிஎஃப் புகழ் யாஷ் தான். அவர் தான் தற்போது இந்திய சினிமா வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வில்லனாக மாறிவிட்டார். நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் யாஷ் தான் ராவணனாக நடிக்க உள்ளர்.
Highest Paid Villain in India
இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க உள்ளனர். ரூ .835 கோடி என்ற அதிக பட்ஜெட்டில் மிகவும் விலையுயர்ந்த படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக யாஷ் இருக்கிறார். எனவே இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் இருந்து 20 -30% பங்கை பெறப் போகிறார்.
அதன்படி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொறுத்து யாஷுக்கு லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் அவருக்கு ரூ .200 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இதன் மூலம் இந்திய சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக யாஷ் மாற உள்ளதாக கூறப்படுகிறது.
Highest Paid Villain in India
இன்று இந்திய சினிமாவில் மிகப்பெரிய உச்ச நடிகர்களாக வலம் வரும் ஷாருக் கான், சல்மான் கான், பிரபாஸ், அக்ஷய் குமார் உள்ளிட்ட நடிகர்கள் கூட ஒரு படத்திற்கு ரூ .200 கோடி வசூலிக்கவில்லை. இந்த நடிகர்கள் அனைவருமே ரூ .120 கோடி -180 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.
எனினும் யாஷை விட அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்களும் உள்ளனர். அமீர் கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ரூ.200 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். ரஜினி ஜெயிலர் படத்திற்காகவும், அமீர் கான் டங்கல் படத்திற்காகவும் 225 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினர். அதே போல் தளபதி 69 படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Highest Paid Villain in India
வால்மிகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ராமாயணம் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026-ம்ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.