- Home
- Cinema
- நடிகைகளை சீண்ட பயப்படணும்.. Youtuberகளுக்கும் செக் - ஹேமா கமிட்டியால் நடிகர் சங்கம் எடுத்த அதிரடி மூவ்!
நடிகைகளை சீண்ட பயப்படணும்.. Youtuberகளுக்கும் செக் - ஹேமா கமிட்டியால் நடிகர் சங்கம் எடுத்த அதிரடி மூவ்!
Hema Committee : மலையாள திரையுலகையே உலுக்கும் வகையில் அமைந்திருந்தது அண்மையில் வெளியான நீதிபதி ஹேமா தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கை.

Hema Committee Report
கடந்த சில வாரங்களாகவே, கேரளா திரையுலகில் உள்ள மூத்த நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்து வருவது அனைவரும் அறிந்ததே. முதல் முறையாக ரேவதி சம்பத் என்ற மலையாள நடிகை, பிரபல இயக்குனர் ஒருவர் மீதும், தமிழ் திரையுலக நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகாரை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்ட நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான சிண்டல்கள் குறித்த தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு கொண்டவர துவங்கினர். இதில் கேரளா திரையுலகின் முன்னணி நடிகர்கள் தொடங்கி, மூத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று பலரும் சிக்கி வருவது தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் கொண்டாடப்பட்ட கேரள திரையுலகம், இப்பொது பெரிய சரிவினை கண்டுள்ளது என்றே கூறலாம்.
ஒரு படத்துக்கு 2 கிளைமாக்ஸா! தமிழ் சினிமாவில் டபுள் Climax உடன் வெளிவந்த ஹிட் படங்கள் ஒரு பார்வை
Actress Minu Muneer
சில தினங்களுக்கு முன்பு மீனு முனீர் என்கின்ற நடிகை, கேரளா சினிமாவின் சில முன்னணி நடிகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். அதன்படி நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மற்றும் இடைவேளை பாபு ஆகியோர், தனக்கு பல சமயங்களில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குறிப்பாக இடைவேளை பாபு, ஒரு முறை நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெறுவது சம்பந்தமாக தன்னை சந்திக்க வேண்டும் என்று கூறியதாகவும். அதை நம்பி அவருடைய இல்லத்திற்கு சென்ற தன்னிடம், அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறினார். அதேபோல ஒரு படப்பிடிப்பின்போது, தான் கழிவறையில் இருந்து வெளியே வந்த பொழுது, பிரபல நடிகர் ஜெயசூர்யா தன்னை பின்னால் இருந்து கட்டி அணைத்து தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார் மினு. இப்படி பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கேரள நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை அளித்து வருவது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Actor Rajinikanth
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரபல தமிழ் நடிகைகள் பலரும் இப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நடிகை ராதிகா சரத்குமார் அண்மையில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில் "கேரள திரையுலகை பொருத்தவரை, நடிகைகளின் கேரவங்ககளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், அதில் அவர்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட பல அந்தரங்க விஷயங்கள் பதிவு செய்யப்படும் என்றும் ஒரு பரபரப்பான விஷயத்தை கூறினார்.
மேலும் இந்த கேரள பாலியல் விவகார விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த் மவுனம் சாதித்ததை குறித்து அவரிடம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்த ராதிகா, "பெரிய நடிகர்கள் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது அவர்கள் மீது வீண் விமர்சனத்தையும், கேள்விகளையும் எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் பலர் இப்பொழுது அரசியலில் இணைந்து தமிழக மக்களுக்காக போராட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பயணித்து வருகின்றனர்."
"ஆனால் முதலில் அந்த நடிகர்கள் தங்களுடன் இணைந்து நடித்த சக நடிகைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் அவர்கள் மீது நம்பிக்கை வரும்" என்று சூசகமாக நடிகர் விஜய்யையும் அவர் தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.
Nadigar Sangam Tamil
இந்நிலையில் இந்த ஹேமா கமிட்டி விவகாரத்தை அடுத்து தமிழக நடிகர் சங்கம் ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இந்த அறிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கிடைக்கப்படவில்லை என்றாலும், தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி...
"நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பாக தொல்லை கொடுக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தாராளமாக புகார் அளிக்கலாம் என்றும், நடிகர் சங்கம் புகார் கொடுப்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள், இதுகுறித்து ஊடகத்தில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல யூடியூப் தளத்தில் கண்டபடி ஆதாரம் இல்லாத விஷயங்களை பேசி நடிகர் நடிகைகள் பற்றி அவதூறு பரப்பினால், அவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், அதேபோல ஒரு நடிகர் மீது அளிக்கப்பட்ட மீட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த நடிகர் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் என்றும், மேலும் இது சம்பந்தமாக கொடுக்கப்படும் புகார்களை கமிட்டி சார்பில் நடிகர் சங்கம் கண்காணித்துக் கொள்ளும் என்றும் அறிவித்திருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 8.. கமலை மிஞ்சுவாரா விஜய் சேதுபதி - இணையவாசிகள் ரியாக்ஷன் எப்படி இருக்கு?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.