மலையாள நடிகர் சங்கம்.. தலைவர் பதிவியை ராஜினாமா செய்த மோகன்லால் - அதிரும் மோலிவுட்!
Mohanlal Resigned : மலையாள திரையுலகில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக, AMMA சங்கத்தின் உறுப்பினர்கள் 17 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.
Hema Committee
கேரளா திரையுலகையே அதிர வைத்தது அண்மையில் வெளியான "ஹேமா கமிட்டி அறிக்கை". ஒட்டுமொத்த மலையாள திரை உலகமே, 15 பேர் கொண்ட கும்பலின் பிடியில் தான் இப்போது இருந்து வருவதாக நடிகைகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். அரைகுறை ஆடைகளில் தங்களை நடிக்க வற்புறுத்துவது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகளில் 20க்கும் மேற்பட்ட ரீ-டேக் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, என்று பெண்களுக்கு பாலியல் ரீதியாக பல தொல்லைகள் மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.
இளையராஜா லிஸ்ட்லயே இல்ல... அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள் பட்டியல் இதோ
Actor Siddique
மலையாள திரையுலகையைச் சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் ஆகிய இருவரும் மீதும் முதலில் இந்த பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக நடிகர் சித்திக் AMMAவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். தொடர்ச்சியாக நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், இடவேளா பாபு உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. நடிகை மினு முனீர் சில தினங்களுக்கு முன்பு 4 முக்கிய நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Actor Jayasurya
இந்த சூழலில் AMMAவின் (Association of Malayalam Movie Artists) தலைவரான மோகன்லால் உட்பட அதன் 17 உறுப்பினர்கள் இப்போது மொத்தமாக தங்களது ராஜினாமாவை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மோகன்லால் சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்பொது அவரும் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Prithviraj
மலையாள திரையுலகில் இதுபோன்ற பயங்கர சம்பம் நடந்தது பெரும் பிரளயத்தை கிளப்பியுள்ளது என்றே கூறலாம். இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகரும், இயக்குனருமான பிரித்திவிராஜ், மலையாள திரையுலகில் நடந்திருக்கும் இந்த விஷயம் மிக கடுமையாக பார்க்கப்பட வேண்டும். புகார்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த நபர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல புகார் அளித்தவர் பொய்யான தகவலை கொடுத்துள்ளார் என்று தெரியவந்தால், நிச்சயம் அவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.