MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜிவி பிரகாஷ் பைக்ல போகும்போது கம்போஸ் பண்ணிய பாட்டு அடிபொலி ஹிட் அடித்த கதை தெரியுமா?

ஜிவி பிரகாஷ் பைக்ல போகும்போது கம்போஸ் பண்ணிய பாட்டு அடிபொலி ஹிட் அடித்த கதை தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷ் குமாரும் ஒருவர், இவர் தன் நண்பன் உடன் பைக்கில் செல்லும் போது கம்போஸ் பண்ணிய பாடலை பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2026, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
GV Prakash Song Secret
Image Credit : X

GV Prakash Song Secret

தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. வெயில் படத்தில் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம், அண்மையில் வெளிவந்த யூத் படம் வரை தொடர்ந்து வருகிறது. இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் வைரல் ஹிட் அடித்த வண்ணம் உள்ளன. அண்மையில் யூத் படத்திற்காக இவர் கம்போஸ் பண்ணிய முட்ட கலக்கி பாடல், பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அப்பாடல் யூடியூப்பிலும் மில்லியன் கணக்கில் வியூஸ்களை வாரிக்குவித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜிவி பிரகாஷ் லைன் அப்
Image Credit : GV Prakash Kumar

ஜிவி பிரகாஷ் லைன் அப்

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைக்கிறார். வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி உடன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவரும் அடுத்த படமாக இது இருக்கும். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
2-ஆவது தேசிய விருது வாங்கிய ஜிவி பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு!
Related image2
ஜிவி பிரகாஷின் ‘ப்ளாக்மெயில்’ பாஸ் ஆனதா? பெயில் ஆனதா? முழு விமர்சனம் இதோ
35
ஜிவி பிரகாஷ் பாடல் ரகசியம்
Image Credit : Google

ஜிவி பிரகாஷ் பாடல் ரகசியம்

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான கிளாசிக் ஹிட் பாடல் ஒன்றைப் பற்றி இந்த தொகுப்பில் பாட உள்ளோம். இசையமைப்பாளர்கள் காரில் செல்லும் போது கம்போஸ் பண்ணிய பாடல்கள் கேள்விப்பட்டிருப்போம், ஒருசிலரோ தான் பிளைட்டில் செல்லும் போது இந்த டியூன் போட்டதாக கூறி இருக்கிறார்கள். ஆனால் ஜிவி பிரகாஷ் குமார் பைக்கில் செல்லும் போது அவருக்கு ஒரு டியூன் ஐடியா கிடைத்திருக்கிறது. உடனே தன்னுடைய போனில் அதை ரெக்கார்டு செய்து, பின்னர் ஸ்டூடியோவில் சென்று அதை கம்போஸ் பண்ணி இருக்கிறார். அந்த பாடல் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

45
பைக்கில் உருவான பாட்டு
Image Credit : Google

பைக்கில் உருவான பாட்டு

இதுகுறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில், “இசையமைப்பாளர்களுக்கு எங்கிருந்து ஒரு ஸ்பார்ட் அல்லது ஐடியா வரும் என்பது தெரியாது. என்னுடைய கெரியரில் மிகப்பெரிய ஹிட் அடித்த பாடல்களில் மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெறும் பூக்கள் பூக்கும் தருணம் பாடலும் ஒன்று. அந்த பாடலை நான் பைக்கில் செல்லும்போது கம்போஸ் பண்ணினேன். என்னுடைய நண்பனுடன் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மதராசப்பட்டினம் படத்தின் ஸ்கிரிப்ட்டை பற்றி யோசித்துக் கொண்டே சென்றேன். அப்போது தான் எனக்கு அந்த ட்யூன் ஐடியா வந்தது. உடனே என்னுடைய போனை எடுத்து வாய்ஸ் ரெக்காடு பண்ணினேன்.

55
மிகப்பெரிய ஹிட்
Image Credit : Social Media

மிகப்பெரிய ஹிட்

அதன்பின்னர் வீட்டுக்கு போனதும் என்னுடைய பியானோவை எடுத்து, அதை முறையாக ஒரு இசை வடிவத்தில் உருவாக்கி இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு போட்டுக் காட்டினேன். அவருக்கும் அந்த ட்யூன் பிடித்திருந்தது. ஆனால் படத்தில் இந்த பாடலுக்கான ஒரு சிச்சுவேஷனே இல்லையே என சொல்லிவிட்டார். தயவு செஞ்சு இந்த பாடலுக்காக ஒரு சிச்சுவேஷன் உருவாக்குங்கள் என சொன்னேன். ஏனெனில் இது ஒரு அழகான பாட்டு, அப்படி அவர் ஒரு சிச்சுவேஷனை உருவாக்கி தான் அந்த படத்தில் அப்பாடலை வைத்தார். அது என்னுடைய கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது” என தெரிவித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி. வி. பிரகாஷ் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth: நான் மதுப்பழக்கத்தை நிறுத்த 'அவர்' தான் காரணம்! ரஜினிகாந்த் சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!
Recommended image2
OTT Crime Thriller : ஓடிடியில் செம ஒர்த்தான தமிழ் படம்... இந்த வீக்கெண்ட் மிஸ் பண்ணாம பாருங்க!
Recommended image3
Trisha : கோடிகளில் புரளும் த்ரிஷா; சென்னை வீடு முதல் லண்டன் பங்களா வரை... முழு சொத்து மதிப்பு இதோ!
Related Stories
Recommended image1
2-ஆவது தேசிய விருது வாங்கிய ஜிவி பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு!
Recommended image2
ஜிவி பிரகாஷின் ‘ப்ளாக்மெயில்’ பாஸ் ஆனதா? பெயில் ஆனதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved