- Home
- Cinema
- ஆயிரத்தில் ஒருவன் போல்... கேப்டன் மில்லருக்கும் தரமான சம்பவம் செய்த ஜிவி பிரகாஷ் - அனல்பறக்க வந்த அப்டேட் இதோ
ஆயிரத்தில் ஒருவன் போல்... கேப்டன் மில்லருக்கும் தரமான சம்பவம் செய்த ஜிவி பிரகாஷ் - அனல்பறக்க வந்த அப்டேட் இதோ
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு உள்ளார்.

வாத்தி படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மாநகரம் ஹீரோ சந்தீப் கிஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கேப்டன் மில்லர் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாத்தி படத்திற்காக இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதால், கேப்டன் மில்லர் படத்துக்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி அருகே வனப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் விழா: வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கமல்; உள்ளூரில் இருந்தும் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன்?
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இசை குறித்து முக்கிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஆயிரத்தில் ஒருவனில் இடம்பெற்ற celebration of life என்கிற பிஜிஎம்-மிற்கு பிறகு கேப்டன் மில்லர் படத்துக்காக 3,4 பிஜிஎம்-கள் இசையமைத்துள்ளேன். அனைத்தும் வேறலெவலில் இருக்கிறது” என ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சீக்கிரம் அந்த மாஸ் பிஜிஎம்-களை வெளியிடுமாறும் கமெண்ட் செய்து வருகின்றனர். கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஏப்ரலில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை முடித்து படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... நானா திருடல... என்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான்...! போலீஸிடம் பகீர் தகவலை வெளியிட்ட ஈஸ்வரி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.