MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நானா திருடல... என்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான்...! போலீஸிடம் பகீர் தகவலை வெளியிட்ட ஈஸ்வரி

நானா திருடல... என்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான்...! போலீஸிடம் பகீர் தகவலை வெளியிட்ட ஈஸ்வரி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட ஈஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 29 2023, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தற்போது சினிமாவில் பிசியாகி உள்ளார். இவர் இயக்கத்தில் லால் சலாம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள் திருடுபோனதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

24

இந்த விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்கிற பெண் தான் திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடிய நகைகளை வைத்து ரூ.1 கோடிக்கு சொந்த வீடே வாங்கி இருக்கிறார் ஈஸ்வரி. திருட்டு நகை மூலம் இந்த வீடு வாங்கியது தெரியாமல் இருக்க தனது கணவரிடம் தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று ஈஸ்வரி பீலா விட்டதும் விசாரணையில் அம்பலமானது.

34

அதுமட்டுமின்றி திருடிய நகைகளை வைத்து வீடு கட்டினால் கண்டுபிடித்து விடுவார்கள் எனக்கருதி வங்கியில் கடன் வாங்கி வீட்டைக் கட்டிவிட்டு, அந்த கடனை இரண்டே ஆண்டுகளில் அடைத்துள்ளார் ஈஸ்வரி. இப்படி பல்வேறு கோல்மால் வேலைகளை செய்த ஈஸ்வரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் தன்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான் என்கிற பகீர் தகவலையும் தெரிவித்திருக்கிறார் ஈஸ்வரி.

இதையும் படியுங்கள்... பத்து தல படத்துக்கு அனுமதி தர மறுத்த தமிழக அரசு... அரசின் முடிவால் கடும் அப்செட்டில் சிம்பு ரசிகர்கள்

44

அதன்படி, ஐஸ்வர்யா வீட்டில் தான் மாடு மாதிரி உழைத்ததாகவும், ஆனால் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை அவர் தர வில்லை என கூறி இருக்கிறார் ஈஸ்வரி. பின்னர் எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என போலீஸ் கேட்டதற்கு மாதம் 30 ஆயிரம் தான் கொடுத்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஈஸ்வரி. அந்த பணம் போதுமானதாக இல்லை என்பதால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி.

அந்த திருட்டுகளை ஐஸ்வர்யா கண்டுபிடிக்காததால், பின்னர் நகைகளை திருட தொடங்கியதாகவும், அதை வைத்து தான் வீடு வாங்கியதாகவும் கூறிய ஈஸ்வரி, இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் நிறைய திருடி இருப்பேன் எனவும் கூறி இருக்கிறார். நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன். இது தான் தன்னை திருட தூண்டியதாகவும் போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு டாடா காட்டிவிட்டு வேறு சேனலுக்கு தாவிய மிர்ச்சி செந்தில்... அவர் நடிக்கும் புது சீரியல் அப்டேட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress Salma Arun : அழகின் உச்சம் மொட்டை மாடியில் போஸ் கொடுக்கும் 'சிறகடிக்க ஆசை' சல்மா அருண்
Recommended image2
தீ பரவியதா? புஸ்ஸுனு போனதா? பராசக்தி படத்தின் முழு விமர்சனம்
Recommended image3
பாகுபலி சாதனையை முறியடித்த தி ராஜா சாப்... முதல் நாளே இத்தனை கோடி வசூலை வாரிசுருட்டியதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved