MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vaadivaasal: சூர்யா இன்றி ஆரம்பமான வாடிவாசல்! வெற்றிமாறன் தந்த தரமான அப்டேட்!

Vaadivaasal: சூர்யா இன்றி ஆரம்பமான வாடிவாசல்! வெற்றிமாறன் தந்த தரமான அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் பணிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், அதன் அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 08 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Vaadivaasal Update: Suriya Fans Rejoice After GV Prakash News  : சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள படம் வாடிவாசல். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் பாடல்களின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் பிரம்மாண்டமான காட்சிகள் இருக்கும் என்று வெற்றிமாறன் ஏற்கனவே சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட 50 அல்லது 60 நாட்கள் இந்த காட்சிகள் படமாக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த புதிய அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வாடிவாசல் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 

24
Actor Suriya starrer Retro

Actor Suriya starrer Retro

சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படம் மே 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பா, தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரேம் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி மற்றும் மாயாபாண்டி கலை இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள். 

இதையும் படியுங்கள்... 'வாடிவாசல்' படப்பிடிப்புக்கு தயாரான வெற்றி மாறன் - சூர்யா! வெளியானது புகைப்படம்!

34
REtro Suriya

REtro Suriya

பிரவீன் ராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், கெச்ச காம்ஃபக்டே சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கார்த்திகேயன் சந்தானம். வினோத் சுகுமாரன் ஒப்பனையும், சுரேஷ் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பும், ஷெரீப் எம் நடனமும், முகமது சுபைர் உடைகளும், தினேஷ் எம் புகைப்படங்களும், டூனே ஜான் விளம்பர வடிவமைப்புகளும், சுரேஷ் ரவி வண்ணங்களும், பி செந்தில் குமார் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், கணேஷ் பி எஸ் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகிறார்கள்.

44
suriya Movie Update

suriya Movie Update

இதுதவிர சூர்யாவின் 45வது படமும் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சூர்யா கடைசியாக நடித்த கங்குவா படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சூர்யா டைட்டில் ரோலில் நடித்திருந்தார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... வாடிவாசலில் சூர்யாவுக்கு ஜோடி இவரா? பொன்னியின் செல்வன் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜல்லிக்கட்டு
திரைப்படம்
இசை
சூர்யா
தமிழ் சினிமா
வெற்றிமாறன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved