தேசிய விருதை எடுத்து வைங்க டா... ஜிவி பிரகாஷின் 100-வது படத்திற்காக இணையும் செம்ம மாஸ் கூட்டணி
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷின் 100-வது படம் குறித்த அப்டேட் சுட சுட வெளிவந்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஜிவி பிரகாஷ், சிறுவயதில் இருந்தே தனது மாமா ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து இசைக் கற்று வந்தார். இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி. அப்படத்தின் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்ததால் ஜிவி பிரகாஷுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
பின்னர் மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், தாண்டவம், தெய்வத்திருமகள், சைவம் என பல்வேறு ஹிட் படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டார்லிங் படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். அப்படம் ஹிட் ஆனதால் இசையமைப்பதற்கு ரெஸ்ட் விட்டு முழு நேர ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார் ஜிவி. அவர் நடிகரான பின்னும் அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தது.
இதையும் படியுங்கள்... Fight-க்கு ரெடியா வாடி... தூள் கிளப்பும் துருவ நட்சத்திரம் படத்தின் செகண்ட் சிங்கிள் - லிரிக்கல் வீடியோ இதோ
அதனால் தற்போது மீண்டும் இசையமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கே இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கிடைக்கவில்லை. அவரின் நீண்ட நாள் கனவாக இருந்த தேசிய விருது கடந்த ஆண்டு தான் அவருக்கு கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் ஜிவி.
இந்நிலையில், தான் இசையமைக்க உள்ள 100-வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார் ஜிவி. அந்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யாவும், சுதா கொங்கராவும் மீண்டும் இணைய உள்ள படம் தான் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி இதற்கு முன் இணைந்த சூரரைப் போற்று படம் 6 தேசிய விருதுகளை வென்றதால், இந்த படமும் ஜிவிக்கு மற்றுமொரு தேசிய விருதை பெற்றுத்தரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படியுங்கள்... துணிவு முதல் மாவீரன் வரை.. தொட்டதெல்லாம் ஹிட்டு! 6 மாதத்தில் 6 பிளாக்பஸ்டர் மூவீஸ்- மாஸ் காட்டும் ரெட் ஜெயண்ட்